அமைச்சருக்காக 1½ மணி நேரக் காத்திருப்பு- பந்தல் இருந்தும் வெயிலில் வாடிய மக்கள்- திருச்சி சிறப்பு மக்கள் தொடர்பு முகாமில் பொதுமக்கள் கடும் அதிருப்தி
திருச்சி 28.10.2026
*அமைச்சருக்காக 1½ மணி நேரக் காத்திருப்பு- பந்தல் இருந்தும் வெயிலில் வாடிய மக்கள்- திருச்சி சிறப்பு மக்கள் தொடர்பு முகாமில் பொதுமக்கள் கடும் அதிருப்தி*
திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்டத்திற்கு உட்பட்ட மண்டலம் 2 அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கலந்துகொள்ளும் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் அரசின் சேவைகளைப் பெற வந்த பொதுமக்களுக்கு, அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது.
மதியம் 2:30 மணிக்கு வர வேண்டிய அமைச்சர் சுமார் 1½ மணி நேரம் தாமதமாக மாலை 4 மணியளவில் தான் முகாம் நடைபெறும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். அமைச்சர் வரும் வரை அவருக்காகக் காத்திருந்த பொதுமக்களும், அரசு அதிகாரிகளும் உள் அரங்கிலும், வெளியேயும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
முகாம் நடைபெறும் இடத்தில் போதிய பந்தல் வசதி செய்யப்படாததால், வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. குறிப்பாக வயதான முதியவர்களுக்காகப் போடப்பட்டிருந்த இருக்கைகள் கூட வெயிலில் கிடந்தன.
வெப்பம் தாங்க முடியாத பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்த மனுக்களைக் கொண்டும், அருகில் இருந்த பேப்பர்களை வைத்தும் வெயிலை மறைத்துக்கொண்டு மிகுந்த சிரமத்திற்கு இடையே தங்களது மனுக்களைப் பதிவேற்றிவிட்டு கடும் அதிருப்தியில் சென்றனர் .

பொதுமக்களின் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் தீர்வு காண நடத்தப்படும் இது போன்ற சிறப்பு முகாம்களில் பொதுமக்களை மிகுந்த பாதுகாப்புடன் நடத்த வேண்டும். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
