*திருச்சி கிழக்கு தொகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் தவெக நிர்வாகிகள்*
திருச்சி 6.04.2026

திருச்சி கிழக்கில் விஜய் தடம்: “தமிழக வெற்றி கழகம்” தீவிர வாக்கு சேகரிப்பு – தொண்டர்கள் உற்சாகம்

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அந்த தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டப் பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன் அவர்களின் ஆலோசனையின் பேரில், மலைக்கோட்டை மாநகர் பகுதி இணைச் செயலாளர் ராக்போர்ட் ராஜேஷ் தலைமையில் இந்தப் பிரச்சாரப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதில் திருச்சி கிழக்கு மாவட்ட உறுப்பினர் சேர்க்கை அணியைச் சேர்ந்த மாவட்ட அமைப்பாளர் முகுந்தன், மாவட்ட இணை அமைப்பாளர்கள் யோகேஸ்வரன் & ஹரிஹரன்,மாவட்டத் துணை அமைப்பாளர் கமலேஷ்,மாவட்ட பொருளாளர் சபரி,மாவட்ட இணை அமைப்பாளர் ஜமுனா ராணி ஆகியோர் வீதி வீதியாக வாக்கு சேகரித்தனர்.

திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட 18-வது வார்டு பகுதிகளில் பிரச்சாரம் தீவிரப்படுத்தப்பட்டது. குறிப்பாக, கிருஷ்ணபுரம் ரோடு மற்றும் முஸ்லிம் தெரு உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்ற நிர்வாகிகள், கழகத்தின் கொள்கைகளையும் தலைவர் விஜய்யின் முன்னெடுப்புகளையும் எடுத்துரைத்து வாக்கு சேகரித்தனர்.
தனது அரசியல் பயணத்தைத் திருச்சியிலிருந்து தொடங்கும் வகையில் விஜய் வேட்பாளராகக் களம் இறங்கியுள்ளது, அக்கட்சியினரிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. “மக்களுக்கான மாற்றம் திருச்சியில் இருந்து தொடங்கும்” என்ற முழக்கத்துடன் இளைஞர்களும் பெண்களும் இந்தப் பிரச்சாரத்தில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.