Trending News Tamil News Website In Trichy

திருச்சியில் இனிப்புத் திருவிழா- ஒரே நாளில் பிரம்மாண்டமாக திறக்கப்பட்ட பி.ஜி நாயுடுவின் 3 புதிய கிளைகள்

0

திருச்சி 25.10.2026

வாடிக்கையாளர்களின் பேராதரவில் பி.ஜி நாயுடு ஸ்வீட்ஸ் திருச்சியில் மூன்று புதிய கிளைகளை திறந்துள்ளது. பாரம்பரிய இனிப்பு வகைகளிலிருந்து இன்றைய காலகட்டத்தில் புதிதாக ட்ரெண்டிங்கில் உள்ள ஸ்வீட்ஸ்கள் வரை கிடைக்கும் சிறந்த இடம்  பி.ஜி நாயுடு என்கிற பெயரையும் நன்மதிப்பையும் பிஜி நாயுடு தொடர்ந்து பெற்று வருகிறது.

அந்த வகையில் வாடிக்கையாளர்களின் ஏக மனதனான ஆதரவோடு பிஜி நாயுடு ஸ்வீட்ஸ் மூன்று புதிய கிளைகளை இன்று திருச்சி மாநகரில் திறந்துள்ளது. திருச்சி தினத்தந்தி அலுவலகம் எதிரில் 53 வது கிளையையும், குண்டூர் மொரைய்ஸ் சிட்டி நுழைவில் 54வது ஷோரூமையும், சத்திரம் பேருந்து நிலையம் மெஜஸ்டிக் மகாராஜா முன்பாக தனது 55 ஆவது ஷோரூமையும் இன்று பிஜி நாயுடு குழுமம் தொடங்கியுள்ளது.திருச்சி மண்டல வர்த்தக பிரிவு மேலாளர் வெங்கட்ராகவன் கலந்து கொண்டு புதிய பி.ஜி நாயுடு ஷோரூம்களை திறந்து வைத்தார்.இதில் திருச்சி மேலாளர் பிள்ளைகனி மற்றும் பலர் கலந்து கொண்டு குத்து விளக்கை ஏற்றினர்.

திறப்பு விழா நிகழ்ச்சிக்கு மேலாண்மை இயக்குனர்கள் பாலாஜி,நிர்வாக இயக்குனர் அமர்நாத்,நிர்வாக இயக்குனர்கள் சார்நாத்,வினோத் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.பி.ஜி நாயுடு ஸ்வீட்ஸ் திருச்சி புதுக்கோட்டை தஞ்சாவூர் பெரம்பலூர் காரைக்குடி பட்டுக்கோட்டை மதுரை ஆகிய ஊர்களில் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முறையில் ஸ்வீட் மற்றும் காரம் உள்ளிட்ட பலகாரங்களை வழங்கி வருகிறது – தரமான நியாயமான விலையில் இங்கு 650 வகையான ஸ்வீட்டுகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட கார வகைகள் விற்பனை செய்யப்படுகிறது.

 

Leave A Reply

Your email address will not be published.