மீடியா விளம்பரங்களைத் தாண்டி சட்டம்-ஒழுங்கு மீது முதல்வர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் -சிறுமி காணாமல் போன விவகாரத்தில் அரசு உடனடி நடவடிக்கை தேவை- காங்கிரஸ் எம்பி கிறிஸ்டோபர் திலக் திருச்சி விமான நிலையத்தில் பேட்டி
திருச்சி 26.10.2026
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான கிறிஸ்டோபர் திலக் இன்று திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர்.
காமராஜர் பிறந்த மண்ணில் கல்வி அமைச்சரே ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டது வருத்தம் அளிக்கிறது. கல்வித்துறையில் கோடிக்கணக்கில் ஊழல் நடப்பதாகவும் பல பள்ளிகளில் குறிப்பாக பெண் பிள்ளைகள் பயிலும் பள்ளிகளில் அடிப்படை வசதியான கழிவறை கூட இல்லாத நிலை உள்ளது. திருச்சி போன்ற அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டத்தில் அடுத்தடுத்து அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் எழுவது நல்ல அறிகுறியல்ல, ஒட்டுமொத்தமாக எங்குத் தவறு நடக்கிறது என்பதை உற்றுநோக்கி உடனடியாக முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். திருச்சியில் முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருக்கும் பாலப் பணிகள் குறித்து லோக்சபா எம்பியும் தானும் அதிகாரிகளிடம் பேசி வருகிறோம். தனுஷ் அரசியலுக்கு வந்துள்ளார். பல சினிமா நடிகர்கள் சினிமா துறையில் படம் எடுப்பது போல இவரும் புதிதாகத் தொடங்கியுள்ளார்.அவரை யாராவது இறக்கி விட்டுட்டார்களா அல்லது அவராக இறங்கி இருக்காரா என்பது தெரியவில்லை. அவர் தனது வழியில் முயன்று பார்க்கட்டும், அது எப்படிப் போகிறது என்று பார்ப்போம். நேற்றைய தினம் அவர் பெண் நிர்வாகிகளைச் சந்தித்துப் பரிசுகள் வழங்கியுள்ளார். அந்தப் பரிசுகள் தாமரை ஆதரவு போல உள்ளதாக பேச்சு எழுந்துள்ளது. ஏற்கனவே அவர் டெல்லி சென்று வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவர் அதிமுகவிலோ அல்லது பாஜகவிலோ இணையப் போவதாகச் சொல்கிறார்கள். அவர் தனியாக அரசியல் செய்தால் வேண்டுமானால் சற்றுப் பிரபலமாகலாம். ஆனால் அவர் அதிமுகவுடன் சேர்ந்தால் அத்துடன் அவரது அரசியல் முடிந்துவிடும். ஏற்கெனவே தாமரையை வைத்து அண்ணாமலை சில முயற்சிகளைச் செய்தார், இப்போது தனுஷ் தனியாகப் படம் எடுக்க ஆரம்பித்துள்ளார். எனவே, எனக்குத் தெரிந்து தாமரையும் எடுபடாது, அதிமுகவும் எடுபடாது, அவர் அரசியலில் வளர வேண்டும் என்றால் தனியாகக் களமிறங்கினால் தான் நன்றாக இருக்கும்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்த கேள்விக்கு… பதில் அளித்த அவர்
ஒரு சிறுமி 15 நாட்களுக்கு மேலாகக் காணாமல் போயிருக்கிறார்.
இது போன்ற விவகாரங்களில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மீடியா விளம்பரங்களைத் தாண்டி சட்டம்,ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பு முதலமைச்சரின் கையில்தான் உள்ளது. எனவே முதல்வர் இதில் கூடுதல் கவனம் செலுத்தி இதுபோன்ற குற்றங்களைத் தடுப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.
