Trending News Tamil News Website In Trichy

அரசு விழாக்களில் கட்சிக்காரர்களுக்கு இடமில்லை- முன்னாள் துணை மேயரை வெளியே நிற்கச் சொன்ன அமைச்சர்

0

திருச்சி 28.10.2026

அரசு விழாக்களில் அரசியல் கட்சிகளுக்கு இடமில்லை- தவெக-ல் இணைந்த முன்னாள் துணை மேயரை வெளியே நிற்கச் சொன்ன அமைச்சர்

திருச்சி மாநகராட்சி மண்டலம் 2 அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தலைமையில் இன்று சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இவ்விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக, சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் துணை மேயரும் அவரது ஆதரவாளர்களும் வருகை தந்திருந்தனர். அமைச்சரை வரவேற்பதற்காக அவர்கள் நுழைவாயிலில் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த அமைச்சர் ரமேஷ் அவர்களிடம் இது அரசு நிகழ்ச்சி நான் உள்ளே சென்று பொதுமக்களை பார்த்துவிட்டு வருகிறேன்.நீங்கள் வெளியே நிற்கவும் என்று கூறிவிட்டுச் சென்றார்.

அரசு விழாக்களில் அரசியல் சார்பற்ற தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அடிப்படையில் கட்சிப் பிரமுகர்களை உள்ளே அனுமதிக்காமல் அமைச்சர் நடந்து கொண்ட விதம் அங்கிருந்தவர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.  அரசு விழாக்களில் நெறிமுறைகள் எவ்வாறு கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதற்கான ஒரு முன்னுதாரணமாகவும் பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.