திருச்சியில் புதிய ஷாப்பிங் திருவிழா-சத்திரம் பேருந்து நிலையம் அருகே ‘வெற்றிவேல் ஜவுளி ஸ்டோர்’ பிரம்மாண்ட தொடக்கம் – அதிரடி தீபாவளி ஆஃபர்கள்
திருச்சி 14.09.2026
*திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே ‘வெற்றிவேல் ஜவுளி ஸ்டோர்’ பிரம்மாண்ட தொடக்கம்- தீபாவளிக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு*
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள வெற்றிவேல் ஜவுளி ஸ்டோர் அமைப்பின் திறப்பு விழா நடைபெற்றது.
இப்புதிய ஜவுளிக் கடையை உரிமையாளர் M. ராம்குமார் ரிப்பன் வெட்டி, பாரம்பரிய முறைப்படி குத்துவிளக்கேற்றி முறைப்படி திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கோட்டை காவல்துறை ஆய்வாளர் பேசில் பிரேம் ஆனந்த் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து நவீன ஆடை ரகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கின்றன. சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இறங்கியவுடனேயே இக்கடை அமைந்துள்ளதால், பொதுமக்கள் அலைச்சலின்றி வந்து செல்ல ஏதுவாக உள்ளது.அருகில் பல முக்கியக் கல்லூரிகள் இருப்பதால், மாணவ-மாணவிகள் தங்களின் விருப்பத்திற்கேற்ப ஆடைகளை மிகக் குறைந்த மற்றும் மலிவு விலையில் தேர்வு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.
வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையைக் முன்னிட்டு, கண்ணைக் கவரும் புதிய மற்றும் டிரெண்டிங் ஜவுளி ரகங்கள் குவிந்துள்ளன. பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வருகை தந்து ஆடைகளை வாங்கி, இந்தத் தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாட உரிமையாளர் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் S. குணசேகர், K. சண்முகம், V. சண்முகம், முத்துக்குமார், நவீன் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழாவின் இறுதியில், வருகை தந்த அனைவரையும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் S. முனவ்வரா சிரின் வரவேற்று நன்றி கூறினார்.