*திருச்சி கிழக்கில் மும்முனைப் போட்டி- களத்தில் குதித்த சசிகலா அணி – விஜய் மற்றும் திமுக-வுடன் நேருக்கு நேர் மோதல்*
*திருச்சி கிழக்கில் மும்முனைப் போட்டி- களத்தில் குதித்த சசிகலா அணி – விஜய் மற்றும் திமுக-வுடன் நேருக்கு நேர் மோதல்*

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி இப்போது மாநிலத்தின் மிக முக்கியமான ‘விஐபி’ தொகுதியாக மாறியுள்ளது.

திருச்சி கிழக்கு தொகுதியில் சசிகலா தலைமையிலான அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் (AIPTMK) சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நந்தகுமார், தனது ஆதரவாளர்களுடன் வந்து உற்சாகமாக வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
ஏற்கனவே இந்தத் தொகுதியில் முக்கியப் புள்ளிகள் களம் கண்டுள்ளதால் போட்டி அனல் பறக்கிறது.
தமிழக வெற்றி கழகம் (TVK) அக்கட்சியின் தலைவர் விஜய் இத்தொகுதியில் நேரடியாகப் போட்டியிடுவதால் ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனமும் இங்கு குவிந்துள்ளது.
திமுக (DMK) ஆளுங்கட்சி சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் மீண்டும் களம் காண்கிறார்.

முன்னணி கட்சிகளான திமுக மற்றும் தமிழக வெற்றி கழகத்திற்கு சவால் விடும் வகையில், தற்போது சசிகலாவின் புதிய கட்சியும் களமிறங்கியுள்ளது திருச்சி கிழக்கில் ஒரு மும்முனைப் போட்டியை உருவாக்கியுள்ளது. சசிகலா அணியின் வருகை வாக்கு வங்கியில் எந்த மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
வேட்புமனுத் தாக்கலின் போதே தொண்டர்களின் பலத்தை நிரூபித்துள்ள நந்தகுமார், இந்தத் தொகுதியில் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்துவார் என அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.