*மண்ணச்சநல்லூர் தொகுதியை தமிழகத்திற்கே முன்மாதிரியாக மாற்றுவேன்- அதிரடி வாக்குறுதி அளித்த திமுக வேட்பாளர் கதிரவன்*
திருச்சி 8.04.2026

*மண்ணச்சநல்லூர் தொகுதியை தமிழகத்திற்கே முன்மாதிரியாக மாற்றுவேன்- அதிரடி வாக்குறுதி அளித்த திமுக வேட்பாளர் கதிரவன்*

மண்ணச்சநல்லூரில் கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் செய்த சாதனைகளே எனது வெற்றிக்கு அச்சாரமாக இருக்கும், மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தாண்டி அத்தியாவசியத் தேவைகளையும் பூர்த்தி செய்து தொகுதியை முன்மாதிரியாக மாற்றுவேன்” என திமுக வேட்பாளர் கதிரவன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

முசிறி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அய்யம்பாளையம், கொடுந்துறை, வீரமணிப்பட்டி, நாச்சம்பட்டி, ராக்கம்பட்டி, முத்தையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் எம்எல்ஏ கதிரவனுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது பேசிய அவர்… புதிய வாக்குறுதிகளை அளித்தார் …அரசுத் தொழிற்சாலைகள் அமைத்தல், தொழில் தொடங்க வங்கிக் கடன் வசதி மற்றும் ஸ்மார்ட் வகுப்பறை மேம்பாடு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார்.
அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகள் முடங்கிக்கிடந்த வளர்ச்சிப் பணிகளை, கடந்த 5 ஆண்டுகளில் திமுக முறியடித்துள்ளது. மகளிர் உரிமைத் தொகை மற்றும் தமிழக முதல்வர் அறிவித்துள்ள ரூ. 8000 கூப்பன் விடுபட்ட அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் எனவும் கூறினார்.

புதிய வாக்குறுதிகளை வேட்பாளர் கதிரவன் அறிவித்தார்..இப்பகுதியில் கோரைப்பாய் தயாரிப்பு மற்றும் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமைக்கப்படும், மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற அரசுத் தொழிற்சாலைகள் மற்றும் எளிதான வங்கிக் கடன்கள்.
கல்வி மற்றும் மருத்துவ சேவைகள் எவ்விதத் தொய்வும் இன்றி தொடர உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என ஆதரவு கோரினர்..
பிரச்சாரத்தின் போது அய்யம்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த 10 பெண்கள் அதிமுகவிலிருந்து விலகி எம்.எல்.ஏ கதிரவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்