திருச்சியில் 4,201 பேருக்கு கிரையப் பத்திரம்- மக்கள் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள கு.ப.கிருஷ்ணன் அழைப்பு
திருச்சி 15.09.2026
*திருச்சியில் 4,201 பேருக்கு கிரையப் பத்திரம்- மக்கள் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள கு.ப.கிருஷ்ணன் அழைப்பு*
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியின் டெல்டா மண்டலப் பொறுப்பாளரும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கு.ப.கிருஷ்ணன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்…
வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் தமிழகம் முழுவதும் குறைந்த விலை நிர்ணயத்தில் வீடு இல்லாத ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 308 நபர்களுக்கு, தவெக அரசு கிரையப் பத்திரம் வழங்குகிறது.புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போர் பட்டியலை வாழ்விட மேம்பாட்டு வாரியம் தயார்செய்து, பிறதுறைகளுக்கு சொந்தமான இடங்களைக்கூட விலைக்கு வாங்கி, கிரையப் பத்திரம் வழங்குகிறது. தங்களுக்கான பங்கு தொகையை செலுத்தி கிரையப் பத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். திருச்சி நகரிலே 4,201 கிரைய பத்திரம் வழங்கப்பட உள்ளது. மக்கள் இதை பயன்படுத்திக் கொண்டு அவர்கள் செலுத்த வேண்டிய பங்குத் தொகையை செலுத்தி கிரைய பத்திரத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். 37 வருஷம் செய்யாதது தற்போது தமிழக வெற்றிக்கலக அரசு செய்துள்ளது.தமிழகத்தில் ஜாதியின் பெயரால் உள்ள தெருக்களின் பெயர்களை மாற்றி புதிய பெயர் வைக்கபடும்.புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டியது அவசியம் உள்ளது..எதிர்க்கட்சிகள் நல்லது செய்யும்போது விமர்சனம் செய்து கொண்டே தான் இருப்பார்கள்…அவதூராகவும் ஆபாசமாகவும் யார் பேசினாலும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்..இடைதேர்தல்களில் தவெக வேட்பாளர்கள் வெற்றிபெறுவது உறுதி என தெரிவித்தார்.