Trending News Tamil News Website In Trichy

மாநகராட்சி இடத்தை வாரச் சந்தையாக மாற்றி கல்லாகட்ட துடிக்கும் ஆளுங்கட்சியினர்: ஜேசிபி முன்பு போராட்டம் நடத்திய திமுக கவுன்சிலர் – திருச்சி கருமண்டபத்தில் தவெக – திமுக மோதலால் பரபரப்பு

0

திருச்சி 12.10.2026

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கருமண்டபம் வார்டு எண் 56-ல் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடம் உள்ளது

இதன் அருகிலேயே மாநகராட்சி ஆரம்பப்பள்ளி மற்றும் கோவில் உள்ளதுடன், இந்த மைதானத்தை பள்ளி குழந்தைகள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்ததுடன் கோவில் விழாக்கள் நடத்தி வந்தனர்

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மஞ்சுளாதேவி மற்றும் மாநகராட்சி அனுமதியின்றி, தமிழக வெற்றி கழகத்தினர் அத்துமீறி உள்ளே புகுந்து பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள மாநகராட்சி இடத்தை சுத்தம்செய்து சட்டவிரோதமாக வாரசந்தை அமைத்து கல்லா கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்ய முற்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாமன்ற உறுப்பினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள், மேயர் மாமன்ற உறுப்பினர் மற்றும் தொகுதி எம்.எல்ஏ. கே.என் நேரு ஆகியோர் ஒப்புதலின்றி அவர்களுக்கு தெரியாமல் அத்துமீறலில் ஈடுபட்டது குறித்து தட்டி கேட்டதுடன், ஜேசிபி இயந்திரத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்,

மேலும் நிலைமை மோசமடைந்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் அழைத்துப் பேசியதுடன், ஜேசிபிகொண்டு பணிகள் நடைபெற்றுவருவதை நிறுத்த உத்தரவிட்டார்.

அதன் பின்னரே பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர், இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.