Trending News Tamil News Website In Trichy

மலைக்கோட்டையில் அதிரடி வாக்கு சேகரிப்பு-தவெக மாவட்டப் பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன் தலைமையில் திரண்ட தொண்டர்கள்*

0

திருச்சி 16.04.2026

**மலைக்கோட்டையில் அதிரடி வாக்கு சேகரிப்பு-தவெக மாவட்டப் பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன் தலைமையில் திரண்ட தொண்டர்கள்*

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மலைக்கோட்டை பகுதி 17-வது வார்டில், தவெக கட்சியின் திருச்சி மாவட்டப் பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன் தலைமையில் மாபெரும் வாக்கு சேகரிப்பு இயக்கம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மாநில தலைமைக் கழகப் பேச்சாளர் முனைவர் சம்பத்குமார் கலந்துகொண்டு, கட்சியின் கொள்கைகளையும் மக்கள் நலத்திட்டங்களையும் விளக்கி பொதுமக்களிடையே உரையாற்றினார்.

வாக்கு சேகரிப்பின் போது மலைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான மலைக்கோட்டை பகுதி செயலாளர் சதீஷ்,இணைச் செயலாளர் ராக்போர்ட் ராஜேஷ், பொருளாளர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வின் சிறப்பம்சமாக, தமிழக வெற்றி கழகத்தின் மகளிர் அணியினர் மற்றும் வார்டு நிர்வாகிகள் பெருமளவில் திரண்டு வீதி வீதியாகச் சென்று மக்களிடம் ஆதரவு திரட்டினர். 17-வது வார்டு மக்கள் மத்தியில் இந்த பரப்புரை மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

மாவட்டப் பொறுப்பாளர் கரிகாலன் அவர்களின் வழிகாட்டுதலில், பகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டனர். வரும் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் இந்த களப்பணி மேற்கொள்ளப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.