*தளபதியை வரவேற்ற திருச்சி த.வெ.க பட்டாளம்- ராக்போர்ட் ராஜேஷ், கோவில் சீனி, முகுந்தன் உள்ளிட்டோர் உற்சாகம்*
திருச்சி 11.04.2026

**விஜய்க்கு உற்சாக வரவேற்பு-திருச்சி விமான நிலையத்தில் த.வெ.க நிர்வாகிகள் திரண்டனர்*

காரைக்குடியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, திருச்சியிலிருந்து விமானம் மூலம் சென்னை செல்வதற்காக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று திருச்சி விமான நிலையம் வருகை தந்தார். அவருக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு கார் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்த விஜய் அவர்களுக்கு, திருச்சி மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் முக்கிய நிர்வாகிகளான
ராக்போர்ட் ராஜேஷ்,
ஈ.பி.ரோடு சக்தி,
கோவில் சீனி,
முகுந்தன்
உள்ளிட்ட நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர்.

தலைவர் வருகையை முன்னறிந்து விமான நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் ஏராளமான தொண்டர்கள் திரண்டிருந்தனர். விஜய் அவர்களைக் கண்டதும் “தளபதி.. தளபதி..” என முழக்கமிட்டு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அனைவரையும் பார்த்து கையசைத்து தனது புன்னகையை வெளிப்படுத்திய விஜய், பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றார்.