Trending News Tamil News Website In Trichy

*திருச்சி கிழக்கு வேட்பாளர் விஜய்க்கு குவியும் ஆதரவு – ஜெரால்டு மில்டன் தலைமையில் தீவிர வாக்குச் சேகரிப்பு*

0

திருச்சி 16.04.2026

*திருச்சி கிழக்கு தொகுதியில் “விசில்” சின்னத்திற்கு அதிரடி வாக்குச் சேகரிப்பு – வீடு வீடாகச் சென்ற தவெக நிர்வாகிகள்.*

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளருமான விஜய் அவர்களுக்கு ஆதரவாக, பாலக்கரை பகுதிகளில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாலக்கரை பகுதி 32-வது வார்டில் உள்ள மரியம் நகர்,படையாட்சி தெரு,அன்னை நகர், உள்ளிட்ட பகுதிகளில் முன்னாள் மாமன்ற உறுப்பினரும், கட்சியின் முக்கிய நிர்வாகியுமான ஜெரால்டு மில்டன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் படைசூழ, ஒவ்வொரு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்தனர். அப்போது வேட்பாளர் விஜய் அவர்களுக்கு விசில் சின்னத்தில் வாக்களிக்கக் கோரி துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

இந்த பிரச்சாரத்தின் போது கட்சியின் கொள்கைகள் மற்றும் தொகுதிக்கான திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஜெரால்டு மில்டன் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, தவெக-வின் வெற்றியின் அவசியத்தை விளக்கினார்.

தொண்டர்களின் உற்சாகமான முழக்கங்களுடன் நடைபெற்ற இந்தப் பரப்புரை, பாலக்கரை பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.