Trending News Tamil News Website In Trichy

விஜய், சீமானின் நப்பாசை பலிக்காது!” – சிறுபான்மையினர் வாக்குகள் குறித்து அதிரடி அறிக்கை

0

*🔥 “விஜய், சீமானின் நப்பாசை பலிக்காது!” – சிறுபான்மையினர் வாக்குகள் குறித்து அதிரடி அறிக்கை*

தமிழக அரசியலில் சிறுபான்மையின மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதில் தற்போது விவாதம் சூடுபிடித்துள்ளது. இது தொடர்பாக இஸ்லாமிய பத்திரிகையாளர்கள் நலப் பேரவை வெளியிட்டுள்ள கூட்டறிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் (தமிழக வெற்றிக் கழகம்) மற்றும் சீமான் (நாம் தமிழர் கட்சி) ஆகியோர் சிறுபான்மையின மக்களின் வாக்குகளைப் பிரிப்பதன் மூலம் ஆதாயம் அடையத் துடிக்கிறார்கள்.

வரும் தேர்தல்களில் சிறுபான்மையின மக்கள், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கே ஒருமித்த ஆதரவை வழங்குவார்கள். வாக்குகளைச் சிதறடிக்க நினைக்கும் இவர்களின் “நப்பாசை” ஒருபோதும் வெற்றி பெறாது எனப் பேரவை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

“சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்தும் வலிமை மதச்சார்பற்ற அணிக்கே உள்ளது.”

இந்த அறிக்கையை இஸ்லாமிய பத்திரிகையாளர்கள் நலப் பேரவையின் கௌரவத் தலைவர் தமிழ் செம்மல் நாகூர் கலீபா சாஹிப் மற்றும் மாநில பொதுச்செயலாளர் முனைவர் தமீமுல் அன்சாரி ரஹ்மானி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.