*மண்ணச்சநல்லூரில் மொத்தமாக திமுக பக்கம் சாய்ந்த அதிமுக நிர்வாகிகள்- கதிரவனின் மாஸ் பிரச்சாரம்*
திருச்சி 10.04.2026
மண்ணச்சநல்லூரில் கதிரவன் தீவிர பிரச்சாரம் –
அதிமுகவிலிருந்து 200 பேர் திமுகவில் இணைவு

மண்ணச்சநல்லூர் சட்டசபைத் தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் எம்எல்ஏ கதிரவன் மண்ணச்சநல்லூர் மத்திய ஒன்றியம் எதுமலை, ஓமாந்தூர், திருப்பட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் சென்ற இடமெல்லாம் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சமயபுரம் அருகே உள்ள எம்.ஆர்.பாளையம் பகுதியில் கதிரவனுக்காக பிரச்சாரம் மேற்கொள்ள வந்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் மற்றும் கழக முதன்மை செயலாளர் கே.என்.நேரு அவர்களின் முன்னிலையில் 200-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்
1989 முதல் 2016 வரை எதுமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குநர், மண்ணச்சநல்லூர் ஒன்றிய அதிமுக ஒன்றிய பொருளாளர், ஒன்றிய கவுன்சிலர், மாநில பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட கவுன்சிலர் என பல்வேறு பதவிகளில் பொறுப்பு வகித்த ஜெயராமன், மாவட்ட கவுன்சிலர் அமுதா, அதிமுக கிளை மற்றும் ஒன்றிய செயலாளராக பதவி வகித்த கே.ஆர்.டி.ராமமூர்த்தி மற்றும் இளையராஜா, வாழையூர் ராஜேந்திரன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.
இதில் மண்ணச்சநல்லூர் திமுக வேட்பாளர் கதிரவன் எம்.எல்.ஏ, மண்ணச்சநல்லூர் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் சீனிவாச பெருமாள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அப்போது எம்எல்ஏ கதிரவன் பேசுகையில்,
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள் நல் ஆட்சி தொடர மண்ணச்சநல்லுார் தொகுதி மக்களை நாடி வந்துள்ளேன்.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில், முதன் முதலாக உங்களைத் தேடி வந்த என்னை, உங்கள் வீட்டுப்பிள்ளையாக எண்ணி, வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் வாரி வழங்கி உங்களுக்காக பணியாற்ற வாய்ப்பளித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி.
கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில், மண்ணச்சநல்லுார் தொகுதியில் மட்டும் மகத்தான மக்கள் நலத்திட்டங்கள், வளர்ச்சித்திட்டங்கள் மக்கள் மனம் நிறையும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளன.
அந்த வகையில் திருப்பட்டூர் ஊராட்சியில் குடிநீர், சிமெண்ட் சாலை, தார்சாலை, பேவர் பிளாக் சாலை, வடிகால் வசதிகள், பள்ளிக்கட்டிடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் என 7 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்டுள்ளன. எதுமலையில் 8.19 கோடி ரூபாயிலும், வரதராஜபுரம் காலனியில் ஒரு கோடியே 9 லட்சம் ரூபாயிலும் இந்த வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஓமாந்துாரில், குடிநீர் வசதிகள், சிமெண்ட் சாலைகள், காமாட்சி அம்மன் கோயில் பொது கழிப்பிடம் உட்பட ரூ.3.04 கோடி ரூபாயிலும், சிறுகுடியில் ரூ.2.4 கோடியிலும், வீராணியில் ரூ1.18 கோடியிலும், வடக்கு சிறுப்பத்துாரில் ரூ.1.06 கோடியிலும், சாலப்பட்டியில் ரூ.1.18 கோடியிலும், எஸ்.மேட்டூரில் 19.72 லட்சத்திலும், தெற்கு சிறுப்பத்துாரில் ரூ.3.91 கோடியிலும், வலையூரில் ரூ.4.13 கோடியிலும் என 5 ஆண்டுகள் முழுவதும் இப்பகுதிகளில் மட்டும் சுமார் 35 கோடி ரூபாயில் மக்களுக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த 5 ஆண்டுகளில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், அரசின் திட்டங்களால் பயன்பெறாத வீடுகளே இல்லை. துணை முதல்வரின் சிறப்பான பணிகளால் விளையாட்டில் ஆர்வம் கொண்ட இளம் மாணவ, மாணவிகளுக்கும் ஏராளமான திட்டங்களும், பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளன.

எதிர்கட்சி வேட்பாளர் வருவார், நடிகர் கட்சி வேட்பாளர் வருவார், இன்னும் ஏராளமானோர் வருவார்கள். ஆனால், ஏப்ரல் 23-ம் தேதி உங்கள் நினைவில் வர வேண்டியது உதயசூரியன் சின்னமும், உங்களுக்காக 2-ஆம் முறையாக உழைக்க காத்திருக்கும் உங்கள் வீட்டுப்பிள்ளை, எப்பொழுதும் மண்ணை மக்களின் நலத்தையே விரும்பும் உங்கள் கதிரவனின் முகம் மட்டும் தான்.
மற்ற கட்சிகளில் பலரும், பலவற்றை நம்பி தேர்தலில் போட்டியிடும் நிலையில், நான், உங்களையும், இந்த மண்ணச்சநல்லுார் மண்ணையும் மட்டுமே நம்பி களத்தில் இருக்கிறேன்.
மண்ணச்சநல்லூரின் வளர்ச்சி பாதை நின்றுவிட வேண்டுமா… இல்லை இன்னும் வேகமாக செல்ல வேண்டுமா? – கதிரவன்.
மண்ணும், மண்ணச்சநல்லுாரும் இருக்கும் வரை இந்த கதிரவனின் காலடித்தடம் உங்களைச் சுற்றியே இருக்கும்” என்று பேசினார்.