106 வயது முதியவருக்கு மறுவாழ்வு அளித்த ‘தி ஐ பவுண்டேஷன்’! திருச்சியில் ஒரு மருத்துவச் சாதனை
திருச்சி 19.03.2026

*106 வயது முதியவருக்கு மறுவாழ்வு அளித்த ‘தி ஐ பவுண்டேஷன்’! திருச்சியில் ஒரு மருத்துவச் சாதனை!*
🏥👁️
திருச்சியில் கண் மருத்துவச் சேவையில் முன்னணியில் உள்ள தி ஐ பவுண்டேஷன் (The Eye Foundation) மருத்துவமனை, 106 வயது முதியவருக்கு வெற்றிகரமாக கண் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளது.

திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த 106 வயது முதியவர் ராஜு என்பவர் கண்புரை மற்றும் குளுக்கோமா (கண் நீர் அழுத்த நோய்) பாதிப்பினால் பார்வையை இழந்து தவித்தார். இவருக்கு தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனையின் நிபுணர் மருத்துவர் அர்ச்சனா தெரேசா தலைமையிலான குழுவினர் உயர் சிகிச்சை அளித்தனர். அறுவை சிகிச்சைக்குப் பின், அந்த முதியவர் தற்போது தனது பார்வையைத் திரும்பப் பெற்று, பிறர் உதவியின்றித் தனது வேலைகளைத் தானே கவனித்து வருகிறார்.

குளுக்கோமா எனப்படும் கண் நீர் அழுத்த நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, தி ஐ பவுண்டேஷன் சார்பில் திருச்சியில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
செய்தியாளர் சந்திப்பில் மருத்துவர் அர்ச்சனா தெரேசா கூறுகையில்..

குளுக்கோமா நோய் எவ்வித அறிகுறியும் இன்றி மெதுவாக பார்வையைப் பறிக்கக்கூடியது.
40 வயதிற்கு மேற்பட்டவர்கள், சர்க்கரை நோயாளிகள், கண்ணில் காயம் ஏற்பட்டவர்கள் மற்றும் குடும்பத்தில் குளுக்கோமா பாதிப்பு உள்ளவர்கள் கட்டாயம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
பொதுமக்களின் நலன் கருதி, குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு மார்ச் 14 முதல் ஏப்ரல் 14 வரை குளுக்கோமா நோய்க்கான இலவச கண் பரிசோதனை வழங்கப்படும்.
அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு சிகிச்சைக் கட்டணத்தில் 10% தள்ளுபடி அளிக்கப்படும்.

விழிப்புணர்வுக்காக அனைத்து ஊர்களிலும் இலவச கண் சிகிச்சை முகாம்களை தி ஐ பவுண்டேஷன் நடத்தி வருகிறது.