புஸ்ஸி ஆனந்தின் பிறந்த நாளை முன்னிட்டு தவெக முக்கிய பிரமுகர் டாக்டர் தமீமுல் அன்சாரி ரஹ்மானி சிறப்பான முறையில் கொண்டாட்டம்
திருச்சி 21.07.2026

புஸ்ஸி ஆனந்தின் பிறந்த நாளை முன்னிட்டு தவெக முக்கிய பிரமுகர் டாக்டர் தமீமுல் அன்சாரி ரஹ்மானி சிறப்பான முறையில் கொண்டாட்டம்
தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் அமைச்சர்’ புஸ்ஸி ஆனந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தவெக முக்கிய பிரமுகரும், தளபதி விஜய் சிந்தனையாளர் மன்ற மாநில தலைவரும், டாக்டர் அப்துல் கலாம் குடும்பத்தினர் நடத்தும் உலகளாவிய அறக்கட்டளையின் தேசிய துணை பொதுச் செயலாளருமான டாக்டர் தமீமுல் அன்சாரி ரஹ்மானி அவர்கள் ஏழை, எளிய மக்களுக்குச் சிறப்பான முறையில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற நத்ஹர் வலி தர்ஹாவில் சிறப்புத் தொழுகை மற்றும் துஆ நடைபெற்றது.
இந்நிகழ்வில் நாகூர் தர்ஹா பிரசிடெண்ட் கலீபா சாஹிப் அவர்கள் கலந்துகொண்டு, டாக்டர் தமீமுல் அன்சாரி ரஹ்மானி அவர்களுடன் இணைந்து துஆ செய்தார்.

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் அவர்கள் நல்ல உடல்நலம், நீண்ட ஆயுள் மற்றும் மனநிறைவோடு வாழவும், தொடர்ந்து மக்கள் சேவையில் மேலும் பல மகத்தான சாதனைகளைப் படைக்கவும் எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொண்டதாக டாக்டர் தமீமுல் அன்சாரி ரஹ்மானி தெரிவித்தார்.