விஷ்வ இந்து பரிஷத் சார்பில் திருச்சி ஆட்சியரிடம் மனு- தூண்டி கருப்பண்ண சுவாமி கோவிலில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கோரிக்கை
திருச்சி 30.06.2026
விஷ்வ இந்து பரிஷத் சார்பில் திருச்சி ஆட்சியரிடம் மனு- தூண்டி கருப்பண்ண சுவாமி கோவிலில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கோரிக்கை
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது.
விஷ்வ இந்து பரிஷத்தின் மாநில இணை அமைப்பாளர் ஆனந்த், மாவட்ட இணை செயலாளர் பரமசிவம் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் முன்னிலையில் மனு அளிக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், வளநாடு கிராமப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு தூண்டி கருப்பண்ண சுவாமி திருக்கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வருகிறது.
இத்திருக்கோவில் அமைந்துள்ள இடமானது வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஆன்மீகத் தலத்திற்கு நாள்தோறும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால், இங்கு வரும் பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் அத்தியாவசிய தேவையான குடிநீர் மிகக் கடுமையான தட்டுப்பாடாக உள்ளது.
பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும் என விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பாகவோ அல்லது மாவட்ட நிர்வாகத்தின் நேரடிப் பார்வையிலோ அங்கு உடனடியாக போர்வெல் ஆழ்துளை கிணறு அமைத்துக் கொடுத்து, பொதுமக்களின் மிக முக்கிய தேவையாக இருக்கும் குடிநீர் தட்டுப்பாட்டை உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.