மாற்றத்தை நோக்கி திருச்சி- மாவட்ட பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன் தலைமையில் தவெக-வினர் தீவிர வாக்கு சேகரிப்பு!”
திருச்சி 9.04.2026

மாற்றத்தை நோக்கி திருச்சி- மாவட்ட பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன் தலைமையில் தவெக-வினர் தீவிர வாக்கு சேகரிப்பு
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில், திருச்சி கிழக்கு தொகுதியில் அக்கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்ட பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன் தலைமையில், மலைக்கோட்டை மாநகர் பகுதி இணை செயலாளர் ராக்போர்ட் ராஜேஷ் நேரடி வழிகாட்டலின் படி பரப்புரை நடைபெற்றது. தொண்டர்கள் உற்சாகத்துடன் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட
14-வது வார்டு பகுதியில் உள்ள
அண்ணா சிலை,மேல சிந்தாமணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்குகள் சேகரித்தனர்.
வாக்கு சேகரிப்பின் போது, தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைகளையும், தலைவர் விஜய்யின் மக்கள் நலத்திட்டங்களையும் எடுத்துக்கூறி கட்சியினர் துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். மாற்றத்தை தேடும் திருச்சி மக்களின் ஆதரவு தவெக-விற்கே” என நிர்வாகிகள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் போட்டோ விமல்,
கோவில் சீனி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு தவெக கொடிகளை ஏந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.