திருச்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையின் போது கனமழையால் மின்வெட்டு- இருட்டிலும் மெழுகுவர்த்தியினை ஏற்றிக்கொண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர் சோதனை
திருச்சி – 23.10.2026
கனமழையால் மின்வெட்டு- மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் திருச்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர் சோதனை
திருச்சி மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை …
திருச்சி காஜாமலை பகுதியில் இயங்கிவரும் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில், மனைப்பிரிவுகளுக்கு அனுமதி அளித்தல், மனை வகைப்பாடு மாற்றுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள லட்சக்கணக்கில் பணம் லஞ்சமாக பெறப்படுவதாகவும், கணக்கில் காட்டப்படாத பணம் புழுங்குவதாகவும் புகார் எழுந்தது.
அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி ஹேமச்சந்திரன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் இன்று மாலை திருச்சிராப்பள்ளி மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் ஒன்றரை மணி நேரமாக நீடிக்கும் இந்த சோதனையில் செய்யப்பட்டதாக தெரியவருகிறது
தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அலுவலர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
கனமழை காரணமாக மின்வெட்டு ஏற்பட்ட நிலையில் இருட்டிலும் மெழுகுவர்த்தியினை ஏற்றிக்கொண்டு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், அங்குள்ள அலுவலர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
