கனமழையில் தத்தளிக்கும் திருச்சி- சாலைகள் மற்றும் மேம்பாலங்களில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி
23.10.2026
*திருச்சியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கொட்டி தீர்த்துவரும் கனமழை – சாலைகள் மற்றும் மேம்பாலங்களில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி*
தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பகல் இரவு என தொடர்ச்சியாக கனமழை பெய்துவருகிறது
தமிழகத்தில் அக்டோபர் 23 முதல் 26 வரை பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருச்சியில் கடந்த மூன்று தினங்களாக இரவு நேரங்களிலும், பகல் நேரங்களிலும் அவ்வப்போது கனமழை மற்றும் இதமானமழை விட்டுவிட்டு பெய்துவருகிறது
இந்நிலையில். திருச்சியில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன், அவ்வப்போது லேசான சாரல்மழை பெய்துவந்தது தொடர்ச்சியாக மாலை 4.40 மணி முதல் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக திருச்சி மாநகர பகுதிகளான மத்திய பேருந்து நிலையம், ஏர்போர்ட் பாலக்கரை காஜாமலை மன்னார்புரம் கருமண்டபம் தென்னூர் தில்லை நகர் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது இந்த மழையின் காரணமாக, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டனர், அதேநேரம் சாலைகள் மற்றும் ஜங்ஷன் ரயில்வே மேம்பாலங்களில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினார்கள்.
