*இல்லந்தோறும் தவெக ஸ்டிக்கர்.. வார்டு வார்டாக வாக்கு சேகரிப்பு – திருச்சி கிழக்கில் குடமுருட்டி கரிகாலன் தலைமையில் தேர்தல் பணி தீவிரம்*
திருச்சி 9.04.2026
*திருச்சி கிழக்கில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்- இல்லங்கள் தோறும் தவெகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு*

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராகக் களம் இறங்கியுள்ள நிலையில், அந்தத் தொகுதியில் அக்கட்சியினர் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாலக்கரை பகுதி, 33-வது வார்டு, 154-வது பூத் அமைந்துள்ள தெருக்களில் மாவட்ட பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன் தலைமையில் இன்று தமிழக வெற்றி கழகத்தினர் தீவிரமான களப்பணியில் ஈடுபட்டனர்.
கட்சியின் சின்னம் மற்றும் வேட்பாளர் ஜோசப் விஜய்யின் உருவம் பொறித்த டோர் ஸ்டிக்கர்களை (Door Stickers) வீடுகள் தோறும் ஒட்டி, வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டினர்.
இந்தப் பிரச்சாரத்தின் போது, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் நேரடியாகக் களமிறங்கி தொண்டர்களை உற்சாகப்படுத்தினர்.குறிப்பாக 154-வது பூத் பகுதியில் உள்ள ஒவ்வொரு வாக்காளரையும் நேரில் சந்தித்து, மாற்றத்திற்கான எங்களது கொள்கைகளை விளக்கி வருகிறோம்” என களத்தில் இருந்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.