Trending News Tamil News Website In Trichy

தவெக’வில் இணைந்தார் இந்திய சோஷலிஸ்ட் தேசிய செயலாளர் டாக்டர் தமீமுல் அன்சாரி

0

‘தவெக’வில் இணைந்தார் இந்திய சோஷலிஸ்ட் தேசிய செயலாளர் டாக்டர் தமீமுல் அன்சாரி

தமிழக அரசியல் களத்தில் விறுவிறுப்பான திருப்பமாக, இந்திய சோஷலிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டாக்டர் தமீமுல் அன்சாரி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் கு.ப. கிருஷ்ணன் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளார்.

hmkp தொழிற்சங்க மாநில பொதுச்செயலாளர், இஸ்லாமிய பத்திரிகையாளர்கள் நலச்சங்க மாநில பொதுச்செயலாளர்.

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் குடும்பத்தினர் நடத்தும் அறக்கட்டளையின் துணை செயலாளர்.

பிரபல திரைப்பட இயக்குநர் லியாகத் அலிகானின் அண்ணன் மகன் & அதிமுக மூத்த தலைவர் உடுமலை லியாகத் அலிகானின் மைத்துனர் ஆவர்.

 

டாக்டர் அன்சாரிக்கு கட்சியின் துண்டு அணிவித்து, இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார் கு.ப.கிருஷ்ணன். மேலும், அன்சாரி தவெகவில் இணைந்ததை தமிழக முதல்வரிடமும், கட்சித் தலைவரிடமும் விரைவில் தெரிவிப்போம்”* என்றும் அவர் கூறினார்.

சமீபத்தில் தான் டாக்டர் தமீமுல் அன்சாரி தமிழக முதல்வரை நேரில் சந்தித்திருந்தார். அந்தச் சந்திப்பைத் தொடர்ந்து தற்போது அவர் தவெகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.