விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவெக அரசு தவறிவிட்டது – மேட்டூர் தண்ணீர் திறப்பில் திட்டமிடல் இல்லை – திருச்சியில் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
திருச்சி 16.10.2026
*விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவெக அரசு தவறிவிட்டது – மேட்டூர் தண்ணீர் திறப்பில் திட்டமிடல் இல்லை – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு*
அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர்,..அரிசி ஒரு கிலோ நூறு ரூபாயை எட்டிவிட்டது. சர்க்கரை விலை கிலோவுக்கு 25 ரூபாய் உயர்ந்துள்ளது. புளி, பருப்பு உட்பட மளிகை சாமான்கள் சுமார் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதை கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து அமைச்சரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டால், எங்கே விலை உயர்ந்துள்ளது என்று திருப்பி கேட்கிறார். இது தவறானது. இந்த விலை உயர்வால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். விலை வியர்வை கட்டுபடுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காது கண்டிக்கத்தக்கது என்றார். மேலும், டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் தண்ணீர் திறந்தார். 45 நாட்களுக்கு தண்ணீர் விடப்படும் என அறிவிக்கப்பட்டு நேற்றோடு 45 நாட்கள் முடிந்து இன்று தண்ணீர் நிறுத்தப்பட்டுவிட்டது. சம்பா சாகுபடியை முழுமையாக எடுக்க ஜனவரி மாதம் வரை தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால் 45 நாட்களில் நிறுத்தியதால் நடவு செய்ய முடியவில்லை, கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லவில்லை. தண்ணீர் திறந்த நோக்கம் நிறைவேறவில்லை. தற்போது அணையின் நீர்மட்டம் 58 அடி தான் உள்ளது. இது குடிநீருக்கே போதாது. காவிரி நீரை நம்பி 20 மாவட்ட மக்கள் குடிநீருக்கு உள்ளனர். திட்டமிடாமல் தண்ணீர் திறந்ததால் சம்பா சாகுபடியும் பாதித்து, எதிர்கால குடிநீர் தேவைக்கும் நீர் இல்லாமல் போய்விட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை ஆணையம் அறிவித்தபடி கர்நாடகாவிடம் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரை முதல்வர் பெற தவறிவிட்டதால் தான் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர், எதிர்காலத்தில் குடிநீர் பிரச்சனையும் ஏற்படும் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.