Trending News Tamil News Website In Trichy

கு.ப.கிருஷ்ணனுக்கு அமைச்சருக்கு இணையான வாரிய தலைவர் பதவி வழங்கிய முதலமைச்சர் விஜய்க்கு இந்திய சோஷலிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டாக்டர் தமீமுல் அன்சாரி ரஹ்மானி நன்றி தெரிவிப்பு

0

திருச்சி

இந்திய சோஷலிஸ்ட் தேசிய செயலாளரான இவர் hmkp தொழிற்சங்க மாநில பொதுச்செயலாளராகவும், இஸ்லாமிய பத்திரிகையாளர்கள் நலச்சங்க மாநில பொதுச்செயலாளராகவும், டாக்டர் அப்துல் கலாம் அவர்களுடைய குடும்பத்தினர் நடத்தும் அறக்கட்டளை துணை செயலாளராகவும் உள்ளார்.

இவர் பிரபல திரைப்பட இயக்குநரான லியாகத் அலிகானுடைய அண்ணன் மகன்..

அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான உடுமலை லியாகத் அலிகானுடைய மைத்துனரும் ஆவார்..

மூத்த அரசியல் ஆளுமை தூய பொது வாழ்க்கையின் அடையாளம் மரியாதைக்குரிய கு.ப கிருஷ்ணன் அவர்களுக்கு அமைச்சருக்கு இணையான பொறுப்பை வழங்கி கெளரவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித் தளபதி அவர்களுக்கு இதயமார்ந்த நன்றி

சுதந்திர போராட்ட வீரர் மரியாதைக்குரிய பெரும்பிடுகு முத்தரையர் அவர்களுடைய சதய தினம் சமீபமாக இந்த கெளரவம் வழங்கப்பட்டது மகிழ்வூட்டுகிறது.

களம் பல கண்டு நின் வீரத்தை நிலை நிறுத்தி

வாகைப்பூ சூடி 16 பெரும் போர்களில் வெற்றியை மட்டுமே பெற்று

பல்லவனுக்கு தோள் கொடுத்து

சேர, சோழ, பாண்டியரை ஒரு சேர வென்று

கொள்ளிடக்கரையை ஆட்சி புரிந்து செந்தலை தலைநகர் கொண்டு

குடைவரை கோவில் கண்டு

தமிழுக்கு முதன் முதலில் மெய்கீர்த்தி கொண்டு

தமிழ் மொழி காத்திட்ட

தனஞ்செய முத்தரையர் உருவாக்கிட்ட தஞ்சை தரணிக்கு காவல் நின்று

நியமத்து காளப்பிடாரியின் ஆசி பெற்ற

மூத்த தமிழ் உலகின் பெரும்பாட்டன்

பேரிடி போல் தாக்கும் குணம் பெற்ற

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் போலவே புரட்சித் தளபதி விஜய் அவர்களும் முதல் களத்திலேயே மகத்தான வெற்றி கண்டு பெரும்பாட்டனின் பேரப் பிள்ளையாக கதிரென ஒளிர்வது மகிழ்ச்சி..

Leave A Reply

Your email address will not be published.