மாற்றம் அமைப்பு மற்றும் அமிர்தம் அறக்கட்டளை இணைந்து நடத்திய தீ விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வுப் பிரச்சாரம்.
திருச்சி 31.10.2026
*திருச்சியில் விபத்து தடுப்பு சேவையாளர் ஸ்ரீனிவாச பிரசாத் தலைமையில் “தீ விபத்தில்லா தீபாவளி” விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரம் துவக்கம்*
திருச்சியில் தீபத் திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியுடனும் தீபாவளியைக் கொண்டாடும் வகையில் தீ விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கும் நிகழ்வு மற்றும் திருச்சி முதல் கங்கை கொண்டான் வரை செல்லும் வாகன விழிப்புணர்வு பிரச்சாரத் துவக்க விழா நடைபெற்றது.
தமிழ்நாடு தீத்தடுப்பு மீட்புப் பணி மைய வளாகம், திருச்சி மாவட்ட தீயணைப்பு மீட்புப் பணி மைய உதவி மாவட்ட அலுவலர் லியோ ஜோசப் ஆரோக்கியராஜ் மற்றும் பொதுநல சேவையாளர் ஸ்ரீனிவாச பிரசாத்
தேசிய மற்றும் மாநில விருது பெற்ற நடிகரும், இயக்குநரும், மாற்றம் அமைப்பு நிறுவனத் தலைவருமான ஆர். ஏ. தாமஸ் ,சாய் பாலாஜி, ஸ்ரீரங்கம் மக்கள் நலச்சங்க தலைவர் மோகன்ராம், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் & யோகா ஆசிரியர் விஜயகுமார் கலந்து கொண்டனர்.குழந்தைகள் பெரியவர்களின் கண்காணிப்பில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசுகளைத் திறந்தவெளியில் மட்டுமே வெடிக்க வேண்டும். அருகில் தண்ணீர் மற்றும் மணல் buckets போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். பட்டாசுகளைப் பயன்படுத்தும்போது பருத்தி ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும். எரிந்து முடிந்த பட்டாசுகளை மீண்டும் பற்றவைக்கக் கூடாது; பட்டாசுகளைப் பாக்கெட்டுகளில் வைத்துக்கொள்ளக் கூடாது; எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள் மற்றும் விலங்குகள் வாழும் பகுதிகளில் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளைத் தவிர்க்க வேண்டும்.இந்த விழிப்புணர்வு நிகழ்வில் திருச்சி மாவட்ட மீட்புப் பணி நிலைய அலுவலர், போக்குவரத்து சரவணன், தீயணைப்போர் ஓட்டுநர் சார்ஜின் பாலசுப்பிரமணியன்,மகேஸ்வரன், பழனியப்பன், தீயணைப்பு வீரர்கள் சிவராமன், முத்துப்பாண்டி, பாலமுருகன், நாகூர் பிச்சை, சந்திரசேகர், ராஜேஷ், சிவகுருநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விபத்தில்லா தீபாவளி – பாதுகாப்பான தீபாவளி – மகிழ்ச்சியான தீபாவளி என்ற உயரிய நோக்கத்துடன் நடைபெற்ற இந்நிகழ்வு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
