திருச்சி விழாக்கோலம்- கே.என்.நேரு இல்லத் திருமண விழாவை முன்னிட்டு பிரம்மாண்ட பேனர்களை வைத்து அசத்தும் அல்லூர் கருணாநிதி
திருச்சி 29.10.2026
*திருச்சி திருவிழாக்கோலம்- கே.என்.நேரு இல்லத் திருமண விழாவை முன்னிட்டு பிரம்மாண்ட பேனர்களை வைத்து அசத்தும் அல்லூர் கருணாநிதி*
திமுக முதன்மைச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் இல்லத் திருமண வரவேற்பு விழா திருச்சி மாநகரில் கோலாகலமாக நடைபெற உள்ளதை முன்னிட்டு திமுக மாவட்ட துணைச் செயலாளர் அல்லூர் மு.கருணாநிதி பிரம்மாண்ட வரவேற்பு பேனர்களை அமைத்து திருச்சி மாநகரையே அதிர வைத்துள்ளார்.
கழகத் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் பொன்னான வாழ்த்துகளுடன் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு இல்லத் திருமண வரவேற்பு விழா திருச்சி – திண்டுக்கல் சாலையில் உள்ள கேர் கல்லூரி வளாகத்தில் நவம்பர் 19, வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது.

இவ்விழாவிற்கு திருச்சி வருகை தரும் முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரையும் பிரம்மாண்டமான முறையில் வரவேற்பளிக்கும் விதமாக மாவட்ட துணைச் செயலாளர் அல்லூர் மு.கருணாநிதி அவர்கள் திருச்சி மாநகரின் முக்கியப் பகுதிகள் முழுவதும் ராட்சத பேனர்கள் வைத்து அசத்தி வருகிறார்.
