Trending News Tamil News Website In Trichy

இடைத்தேர்தல் வெற்றி உற்சாகம் – திருச்சி நீதிமன்றத்தில் தவெக வழக்கறிஞர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

0

திருச்சி 10.10.2026

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் வெற்றி -திருச்சி நீதிமன்ற வளாகத்தில் தவெக வழக்கறிஞர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி உற்சாகக் கொண்டாட்டம்

தமிழகத்தில் நடைபெற்ற தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களான மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்தச் வெற்றியைத் தவெக கட்சியினரும், தொண்டர்களும் தமிழகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர் அணி சார்பில் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கும், சக வழக்கறிஞர்களுக்கும் இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த உற்சாகக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் தவெக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த வரகனேரி சசிகுமார், எஸ்.பி. சௌந்தர்ராஜன், புவனேஸ்வரி, கள்ளிக்குடி செந்தில்குமார், லதா மங்கேஷ்கர், பிரியா, முல்லை சுரேஷ், சேது மாதவன், கனிமொழி, சுரேஷ் ராஜ் மற்றும் காங்கிரஸ் வழக்கறிஞர் விக்னேஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.