Trending News Tamil News Website In Trichy

ஜே.இ.இ., பிட்சாட் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு ஆகாஷ் நிறுவனத்தின் புதிய பயிற்சித் திட்டம் அறிமுகம்

0

திருச்சி 29.10.2026

*ஆகாஷ் கல்வி நிறுவனம் சார்பில் ‘இன்விக்டஸ் – இன்ஜினியரிங் 2.0’ புதிய பயிற்சித் திட்டம் அறிமுகம்*

நாட்டின் முன்னணி கல்வி நிறுவனமான ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் (AESL), ஜே.இ.இ. மெயின், அட்வான்ஸ்டு மற்றும் பிட்சாட் (BITSAT) போன்ற உயர்தரப் பொறியியல் நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக ஆகாஷ் இன்விக்டஸ் – இன்ஜினியரிங் 2.0’ என்ற புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட பயிற்சித் திட்டத்தை முறைப்படி அறிமுகப்படுத்தியுள்ளது.

மாணவர்கள் நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்று, சிறந்த ரேங்க்குகளைப் பெறும் வகையில் இத்திட்டம் கீழ்க்கண்ட ஆறு முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.

சிறந்த மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்களின் வழிகாட்டுதல். மேம்படுத்தப்பட்ட மற்றும் நவீன பாடப்புத்தகங்கள். அறிவியல் பூர்வமான தேர்வு முறைகள் (Scientific Assessment Methods).

மாணவர்களின் திறன் பகுப்பாய்வு (Student Performance Analysis).

ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட வழிகாட்டுதல் (Personalized Mentorship).

தேசிய அளவில் போட்டித்தன்மையை அதிகரிக்கும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

மாணவர்களின் தகுதி மற்றும் தேவைகளுக்கு ஏற்ப இத்திட்டம் பின்வரும் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன:

1. **ஏஸ் (Ace)**

2. **அச்சீவர் (Achiever)**

3. **அக்சலரேட்டர் (Accelerator)**

4. **அப்பெக்ஸ் (Apex)**

இதுகுறித்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான சந்திரசேகர் ரெட்டி கரீசா கூறுகையில்…

மாணவர்கள் ஜே.இ.இ. உள்ளிட்ட கடினமான பொறியியல் நுழைவுத் தேர்வுகளில் மிகச் சிறந்த தரவரிசைப் பெற்று, தங்களின் லட்சியத்தை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தப் புதிய பயிற்சி முறை உருவாக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இந்த அதிநவீன பயிற்சித் திட்டம் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ஆகாஷ் கிளைகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் சேர்க்கைக்கு 7303759494 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.