Trending News Tamil News Website In Trichy

*தமிழகம் முழுவதும் திமுகவிற்கு ஆதரவாக டாக்டர் தமீமுல் அன்சாரி ரஹ்மானி தேர்தல் சுற்றுப்பயணம்*

0

திருச்சி 10.04.2026

*திமுக கூட்டணிக்கு ஆதரவாக டாக்டர் தமீமுல் அன்சாரி ரஹ்மானி அதிரடி பரப்புரை – முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு*

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, இந்திய சோஷலிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டாக்டர் தமீமுல் அன்சாரி ரஹ்மானி அவர்களின் தலைமையில் தமிழகம் தழுவிய தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணம் உற்சாகமாகத் தொடங்கியது.

இந்திய சோஷலிஸ்ட் கட்சி (தேசிய செயலாளர்),HMKP தொழிற்சங்கம் (மாநில பொதுச்செயலாளர்) இஸ்லாமிய பத்திரிகையாளர்கள் நலச்சங்கம் (மாநில பொதுச்செயலாளர்)ஆகிய மூன்று முக்கிய அமைப்புகளின் சார்பாக இந்த ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

பரப்புரையைத் தொடங்கி வைத்த திமுக கலை இலக்கிய பேரவை மாநில துணை செயலாளர் எழில்மாறன் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்த பரப்புரை பயணத்தில் நெதர்லாந்து மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கான முன்னாள் துணை நிலை கௌரவத் தூதர் டாக்டர் ஹிம்மத் ஹூசைன் மற்றும் நாகூர் தர்ஹா தலைவரும் (பிரசிடெண்ட்), தமிழ் செம்மல் விருது பெற்றவருமான கலீபா சாஹிப் ஆகியோர் கலந்துகொண்டு திமுக கூட்டணிக்கு தங்களது ஆதரவை உறுதிப்படுத்தினர்.

பரப்புரையின் தொடக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் தமீமுல் அன்சாரி ரஹ்மானி, தேர்தல் ஆணைய நியமனங்கள் குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். அவர் பேசுகையில்..மத்தியில் அமித்ஷாவிடம் உதவியாளராக இருந்தவரை தலைமை தேர்தல் ஆணையராக நியமித்தால், அவர் எடப்பாடியாரிடம் தனிச் செயலாளராக இருந்தவரைத் தானே இங்கு தலைமைச் செயலாளராக நியமிப்பார்? இத்தகைய சாம, பேத, தான, தண்ட முறையற்ற செயல்களை முறியடித்து, மக்கள் ஆதரவுடன் திமுக அமோக வெற்றி பெறும். தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ள இந்தச் சுற்றுப்பயணம், மதச்சார்பற்ற முற்போக்கு அணியின் வெற்றியை உறுதி செய்யும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.