தேர்தல் கட்டுப்பாடுகளால் வணிகர்கள் பாதிப்பு- பண வரம்பை ரூபாய் 3 லட்சமாக உயர்த்த எஸ்டிபிஐ (SDPI) கட்சி கோரிக்கை
திருச்சி 24.03.2026

*தேர்தல் கட்டுப்பாடுகளால் வணிகர்கள் பாதிப்பு- பண வரம்பை ரூபாய் 3 லட்சமாக உயர்த்த எஸ்டிபிஐ (SDPI) கட்சி கோரிக்கை*
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, பறக்கும் படையினரின் வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியர் அவர்களிடத்தில் இன்று எஸ்டிபிஐ (SDPI) கட்சியின் வர்த்தக அணி மாநில செயலாளர் முபாரக், மாநில செயற்குழு உறுப்பினர் ஷேக் அலாவுதீன், திருச்சி மாவட்ட தலைவர் பக்ருதீன், திருச்சி மாவட்ட செயலாளர் அப்துல் மாலிக் ஆகியோர் இன்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் சந்தித்து பேசுகையில்..
தேர்தல் பறக்கும் படையினரின் சோதனையால் சிறு மற்றும் குறு வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, ஹோட்டல் உரிமையாளர்கள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் பணப் பரிமாற்றக் கட்டுப்பாடுகளால் வியாபாரத்தை தொடர முடியாமல் தவிக்கின்றனர்.
தற்போது தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள ரூபாய் 50,000 என்ற பண வரம்பு வணிகர்களுக்கு போதுமானதாக இல்லை. எனவே, வணிகர்களின் நலன் கருதி இந்த வரம்பை ரூபாய் 3 லட்சம் வரை உயர்த்த வேண்டும்.
இதுவரை சுமார் ரூபாய் 151 கோடிக்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதில் பெரும்பாலானவை வணிகர்களுடையது என்பது வருத்தத்திற்குரியது.
திருவிழாக் காலங்கள் நெருங்கி வருவதால், வணிகர்கள் தடையின்றி தொழில் செய்ய ஏதுவாக மாநில அரசும், தேர்தல் ஆணையமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.