*திருச்சி வந்த ‘தளபதி’ விஜய்க்கு ராக்போர்ட் ராஜேஷ், கோவில் சீனி, காட்டூர் கதிர், வாளாடி ஆனந்த் ஆகியோரின் சிறப்பான வரவேற்பு*
*திருச்சி வந்த ‘தளபதி’ விஜய்க்கு ராக்போர்ட் ராஜேஷ், கோவில் சீனி, காட்டூர் கதிர், வாளாடி ஆனந்த் ஆகியோரின் சிறப்பான வரவேற்பு*
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், திருச்சி கிழக்குத் தொகுதி வேட்பாளருமான விஜய் திருச்சியில் மேற்கொண்ட அதிரடிப் பிரச்சாரம் மற்றும் மும்மத வழிபாடுகள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன.
சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி வருகை தந்த விஜய், வயர்லெஸ் சாலையில் இருந்து தனது ரோடு ஷோவை (Road Show) தொடங்கினார். கே.கே நகர், காஜாமலை, கொட்டப்பட்டு என அவர் சென்ற இடமெல்லாம் ரசிகர்கள் வழிநெடுகிலும் நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் விஜய்க்குப் பல்வேறு அன்பளிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர்.
மதியம் 3:30 முதல் 5:30 மணி வரை திருச்சியின் முக்கிய வீதிகள் மக்கள் கடலால் ஸ்தம்பித்தன.
விஜய்யின் இந்தப் பிரச்சாரப் பயணத்தில் மிக முக்கியமான நிகழ்வாக அமைந்தது அவரது மும்மத வழிபாடு. அரசியலில் ‘சமத்துவம்’ என்ற கொள்கையை உறுதிப்படுத்தும் வகையில் அந்தோனியார் ஆலயம் (வயர்லெஸ் சாலை) ஆலயத்திற்குள் சென்ற விஜய், மண்டியிட்டு அமைதியாக வழிபாடு நடத்தினார்.கேகே நகரில் உள்ள பள்ளிவாசலுக்குச் சென்று நிர்வாகிகளைச் சந்தித்து நலம் விசாரித்தார்.

பச்ச நாச்சியம்மன் கோவில் (கொட்டப்பட்டு) இறுதியாகக் கோவிலுக்குச் சென்று அம்மனைத் தரிசித்து வழிபாடு மேற்கொண்டார்.சுமார் இரண்டு மணி நேர ரோடு ஷோவிற்குப் பிறகு, மீண்டும் திருச்சி விமான நிலையம் சென்றடைந்த விஜய், அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னைக்குப் புறப்பட்டார்.
மக்களின் அன்புதான் என் பலம் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்த இந்த ரோடு ஷோ, திருச்சி கிழக்குத் தொகுதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.