மண்ணச்சநல்லூரில் மக்கள் கடல்- திருவிழா கோலமான தேர்தல் களம்: ‘மாஸ்’ காட்டும் திமுக வேட்பாளர் கதிரவன்*
திருச்சி
**மண்ணச்சநல்லூரில் மக்கள் கடல்- திருவிழா கோலமான தேர்தல் களம்: ‘மாஸ்’ காட்டும் திமுக வேட்பாளர் கதிரவன்*
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026-ன் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிரவன் மேற்கொண்டு வரும் சூறாவளி பிரச்சாரம், தொகுதியையே ஒரு திருவிழா கோலமாக மாற்றியுள்ளது.
மண்ணச்சநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட வார்டு 1 முதல் 18 வரை இன்று நடைபெற்ற அனல் பறக்கும் பிரச்சாரத்தில், வேட்பாளர் கதிரவன் அவர்களுக்குப் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். செல்லும் இடமெல்லாம் மேளதாளங்கள் முழங்க, மலர் தூவி, தொண்டர்களும் பொதுமக்களும் அவரை ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, வேட்பாளர் கதிரவன் அவர்கள் குதிரை சவாரி செய்தபடி மக்களிடம் வாக்கு சேகரித்தது இளைஞர்கள் மற்றும் பொதுமக்களைப் பெரிதும் கவர்ந்தது.
தங்கள் வீட்டுப் பிள்ளையாகக் கருதி பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தனர்.
இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு வேட்பாளருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
மிகவும் நெகிழ்ச்சியான நிகழ்வாக, பிரச்சாரத்தின் போது ஒரு தம்பதியினர் தங்கள் குழந்தையை வேட்பாளரிடம் நீட்ட, அவர் அந்த குழந்தைக்குப் பெயர் சூட்டி மகிழ்வித்தார்.
இந்த எழுச்சி மிகு பிரச்சாரத்தில் ஒன்றிய கழகச் செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் திமுகவின் தோழமைக் கட்சி நிர்வாகிகள் எனப் பெருந்திரளானோர் பங்கேற்றனர்.
‘உதயசூரியன்’ சின்னத்திற்கு ஆதரவாக ஒட்டுமொத்த தொகுதியும் திரண்டு நின்றது, எதிர்தரப்பினரை வியக்க வைக்கும் வகையில் அமைந்தது.
மண்ணச்சநல்லூர் தொகுதியின் ஒவ்வொரு தெருவும் இன்று திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. வேட்பாளர் கதிரவனின் ‘மாஸ்’ என்ட்ரி மற்றும் மக்கள் காட்டும் அன்பு, தொகுதியில் உதயசூரியனின் வெற்றியை இப்போதே உறுதி செய்துவிட்டது போலத் தோன்றுகிறது.