Trending News Tamil News Website In Trichy

முதல்வர் விஜய் பிறந்தநாள்: திருச்சியில் 250 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய த.வெ.க நிர்வாகிகள்

0

திருச்சி 24.06.2026

முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாள் – 250 க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடிய பாலக்கரை பகுதி த.வெ.க நிர்வாகிகள்

தமிழக முதல்வரும் தவெக கட்சியின் தலைவருமான ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை தமிழக முழுவதும் கட்சித் தொண்டர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட பாலக்கரை பகுதி த.வெ.க நிர்வாகிகள் சார்பில் சங்கிலியாண்டபுரம் அரசமரம் அருகே 250-க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

பாலக்கரை பகுதி செயலாளர் சந்திரசேகர் அவர்களின் ஏற்பாட்டின் பேரில் தவெக மாவட்ட நிர்வாகி சேஷாத்திரி பாலு மற்றும் ஜெயராஜ் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் மாவட்ட பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கி சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியில் தவெக மாவட்ட நிர்வாகிகள் குமார், பிரகாஷ், மோகன், வார்டு செயலாளர்கள் வேலாயுதம் மாரி, சாந்தி ஜேம்ஸ், டிக்ரோஸ், எப்சியால், நிக்சன், சந்தோஷ், லட்சுமி உட்பட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.