Trending News Tamil News Website In Trichy

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி பிரியாணி விருந்து- யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் நெகிழ்ச்சி

0

திருச்சி 21.03.3026

*மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி பிரியாணி விருந்து- யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் நெகிழ்ச்சி*

ரமலான் திருநாளை முன்னிட்டு திருச்சியில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் சார்பில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் மாற்று மதத்தினருக்கு பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.

முப்பது நாட்கள் நோன்பு முடிந்து இன்று ரம்ஜான் பெருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியர்கள், காலையில் சிறப்பு தொழுகையை நிறைவேற்றினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் மாநிலத் தலைவர் பீமநகர் எஸ். ரபீக் கூறுகையில்..

பிரியாணி விருந்து மற்றும் சமூக நல்லிணக்கம்

இந்த அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட மாற்று மதச் சகோதரர்களுக்கு பிரியாணி வழங்கி வருகிறோம்.

நாங்கள் உண்ணும் அதே உணவை மற்ற மதச் சகோதரர்களுக்கும் வழங்கி, தமிழகத்தில் அண்ணன் தம்பியாகவும், மாமன் மச்சானாகவும் பழகி வரும் சமூக நல்லிணக்கத்தைப் பறைசாற்றவே இந்த நிகழ்வை நடத்துகிறோம்.”

தமிழகத்தில் மதவாத சக்திகளுக்கு எப்போதும் இடமில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்த ரபீக், தமிழகத்தில் நிலவும் அமைதியான சூழலும், நல்லாட்சியும் தொடர வேண்டும் என்பதே தங்களின் விருப்பம் என்றும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.