நீதிமன்ற வளாகத்தில் 137-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்- முதன்மை மாவட்ட நீதிபதி திரு. M. கிறிஸ்டோபர் பங்கேற்பு
திருச்சி 15.09.2026
*நீதிமன்ற வளாகத்தில் 137-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்- முதன்மை மாவட்ட நீதிபதி திரு. M. கிறிஸ்டோபர் பங்கேற்பு*
நீதிமன்ற வளாகத்தில் வீற்றிருக்கும் 137 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ விநாயகர் ஆலயத்தின் விநாயகர் சதுர்த்தி விழா இன்று மிகச் சிறப்பாகவும் விமரிசையாகவும் நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி திரு. M. கிறிஸ்டோபர் அவர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்து சிறப்பு பூஜைகளில் பங்கேற்றார்.
மூத்த வழக்கறிஞர்கள், இளம் வழக்கறிஞர்கள் மற்றும் பெண் வழக்கறிஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து விழாவிற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர்.
முதன்மை மாவட்ட நீதிபதி திரு. M. கிறிஸ்டோபர், குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு. P. V. வெங்கட், நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் வழக்காடிகள் என 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
137 ஆண்டுகால நீண்ட பாரம்பரியமிக்க இந்த விநாயகர் சதுர்த்தி வழிபாடு, நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தியது. அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.