14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – தாத்தாவுக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
திருச்சி 8.10.2026
*14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – தாத்தாவுக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு*
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் அவரது தாத்தாவான ராமலிங்கம் (60) என்பவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 5,000 அபராதம் விதித்து திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி திருமதி. சண்முகபிரியா தீர்ப்பளித்துள்ளார். கடந்த 07.05.2025 அன்று சிறுமிக்கு நடந்த கொடுமை குறித்து அவரது தாய் அளித்த புகாரின் பேரில், ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. குற்றவாளி ராமலிங்கம் 10.07.2025 அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். இவ்வழக்கின் விசாரணையை விரைந்து முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த முன்னாள் காவல் ஆய்வாளர் ஜெயசித்ரா மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளைக் கவனித்த பெண் காவலர் நித்தியா ஆகியோரை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ், வெகுவாகப் பாராட்டி வாழ்த்தினார்.