Trending News Tamil News Website In Trichy

200 யூனிட் இலவசம்னு சொன்ன அரசு… இப்போ 7,000 ரூபா கட்டச் சொல்லுது– மின்வெட்டால் வீதியில் இறங்கிய பொதுமக்கள்- முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு குற்றச்சாட்டு

0

திருச்சி 17.09.2026

*200 யூனிட் இலவசம்னு சொன்ன அரசு… இப்போ 7,000 ரூபா கட்டச் சொல்லுது– மின்வெட்டால் வீதியில் இறங்கிய பொதுமக்கள்- முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு குற்றச்சாட்டு*

திருச்சியில் தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திமுக முதன்மைச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும் , முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு..

திமுக பாஜகவுடன் மறைமுகக் கூட்டணியில் உள்ளது என்ற குற்றச்சாட்டை முற்றிலும் மறுக்கிறோம். சனாதனம், சமூக நீதி, இஸ்லாமியர் இடஒதுக்கீடு, ஒரே நாடு ஒரே தேர்தல் என பாஜகவின் எந்தவொரு கொள்கைக்கும் திமுக ஒப்புக்கொள்ளவில்லை.

தற்போது கூட்டணியில் இருப்பவர்கள்தான் உண்மையில் பாஜகவுடன் மறைமுக உறவில் உள்ளனர்.முந்தைய அதிமுக ஆட்சியில் 200 யூனிட் இலவச மின்சாரம் தருவதாகக் கூறினார்கள். ஆனால் ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தியவர்கள் இன்று ரூபாய் 5,000 முதல் 7,000 வரை கட்ட வேண்டிய சூழல் உள்ளது. கிராமங்கள் உட்பட பல இடங்களில் தொடர் மின்வெட்டு நிலவுவதால், பொதுமக்களே வீதியில் இறங்கி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் சரிவர கிடைக்காததால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். துரை வைகோவின் விமர்சனங்கள் குறித்து நான் அதிகம் பேச விரும்பவில்லை. திமுக தலைவர் மற்றும் கட்சி வளர்ச்சி குறித்து பேச அவருக்கு எந்த தகுதியும் உரிமையும் இல்லை. அவதூறான குற்றச்சாட்டுகளுக்கு உரிய முறையில் பதிலளிக்கப்படும்.

Leave A Reply

Your email address will not be published.