Trending News Tamil News Website In Trichy

திருச்சி கம்பரசம்பேட்டை தடுப்பணையில் சோகம்-காவிரி ஆற்றில் குளித்த ஐடிஐ மாணவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மாயம்

0

திருச்சி- 18.09.26

காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்ற மாணவன் மாயம்

திருச்சி மாநகரம் கல்லுக்குழியை சேர்ந்தவர் பார்த்தசாரதி(17) இவர் திருச்சி திருவெறும்பூரில் உள்ள ஐடிஐயில் படித்து வருகிறார். இந் நிலையில் இன்று அவர் தன் நண்பர்களோடு திருச்சி காவேரி ஆறு கம்பரசம்பேட்டை தடுப்பணை பகுதியில் குளிக்க சென்றுள்ளார். அவர் நண்பர்களோடு குளித்துக் கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக நீரில் அடித்து சொல்லப்பட்டுள்ளார் அவரை நண்பர்கள் காப்பாற்ற முயன்ற போது காப்பாற்ற முடியவில்லை.

இது குறித்து அங்கு இருந்தவர்கள் ஜியபுரம் போலீசாருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர் தகவலின் அடிப்படையில் கண்டெண்ட்மெண்ட் தீயணைப்பு துறை வீரர்கள் பார்த்தசாரதியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் குறித்து ஜீயபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.