திருச்சி சமயபுரம் விவசாயிகள் போராட்டம் தற்காலிக வாபஸ் – அக்டோபர் 22-ல் மீண்டும் தொடங்கும் என அறிவிப்பு
திருச்சி 19.09.2026
*பயிர்க்கடன் தள்ளுபடி கோரி 5 நாட்களாக நடந்த போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம் – அக்டோபர் 22-ல் மீண்டும் உண்ணாவிரதம்: ஈசன் முருகேசன் அறிவிப்பு*
திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, 50-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கடந்த 5 நாட்களாக தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், இன்று அமைச்சர்கள் ரமேஷ் ,வினோத் , காந்தி ராஜ் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, போராட்டம் வரும் அக்டோபர் 22-ஆம் தேதி வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக விவசாயிகள் அறிவித்து போராட்டத்தை நிறுத்தி வைத்தனர்.
இதுகுறித்து அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஈசன் முருகசாமி கூறுகையில், “அக்டோபர் 22-ஆம் தேதிக்குள் அரசு பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்யாவிட்டால், அதே சமயபுரம் பகுதியில் 100 விவசாயிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றார். மேலும் விவசாயிகளின் போராட்டத்திற்கு காவல்துறையினர் தொந்தரவு கொடுத்தால் சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றும் எச்சரித்தார்.