Trending News Tamil News Website In Trichy

விஜய் சினிமாவில் தான் ஹிரோ, நிஜத்தில் அவர் வில்லன் என்பது அவர் பேச்சிலும் உடல் மொழியிலும் தெரிகிறது – டி.டி.வி தினகரன் பேட்டி

0

திருச்சி- 10.09.26

விஜய் சினிமாவில் தான் ஹிரோ, நிஜத்தில் அவர் வில்லன் என்பது அவர் பேச்சிலும் உடல் மொழியிலும் தெரிகிறது – டி.டி.வி தினகரன் பேட்டி

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்,

கட்சிக்கும், தொகுதி மக்களுக்கும் துரோகம் செய்து விட்டு சென்றார்கள். அதனால் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபடுவோம். விலைவாசி விண்ணைமுட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த அரசு immature அரசாக உள்ளது. மாற்றம் வேண்டும் என்பதற்காக தவறான அரசாங்கத்தை மக்கள் தேர்ந்தெடுத்து விட்டோம் என தற்போது வருத்தப்படுகிறார்கள். விஜய் அரசு இருண்ட அரசாக உள்ளது. அவர் வெளிநாட்டு பயணம் கூட மறைமுகமாக வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், தலைமை செயலகம் கட்ட முடிவெடுத்துள்ளார்கள். துக்ளக் பாணியில் இந்த ஆட்சி சென்று கொண்டுள்ளது. மக்கள் இதனை உணர தொடங்கி விட்டார்கள். நிச்சயம் இதற்கு ஒரு உரிய தீர்ப்பு வழங்குவார்கள்.சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் தரம் தாழ்ந்து பேசுகிறார். த.வெ.க ஆட்சி அமைய ஆதரவளித்த கட்சியினர் தற்போது வருத்தப்படுவார்கள். அவர் தரம் அவ்வளவு தான் என்பதை வெளிப்படுத்தி உள்ளார். மற்றவர்கள் பேசினால் கைது செய்கிறார்கள். மிசா சட்டம் என்பது இந்திரா காந்தி கொண்டு வந்த மிக மோசமான நடவடிக்கை. அதில் ஸ்டாலின் உட்பட பலர் சிறைக்கு சென்றார்கள். சிறைக்கு சென்றவர்களை காவல்துறையினர் தாக்கினார்கள். அதை பழித்து காட்டும் வகையில் விஜய் பேசி உள்ளார். சினிமாவில் தான் விஜய் ஹிரோ. நிஜத்தில் அவர் வில்லன் என்பது அவர் பேசுவதிலும், அவர் உடல் மொழியிலும் தெரிகிறது. தன் சுயநலத்திற்காக அவர் யாரையும் பலிக்கொடுப்பார். ஆட்சியை எப்படி நடத்த வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. நெல் கொள்முதல் செய்ய முடியாமல் இந்த அரசு உள்ளது.எந்தத் துறையிலும் வளர்ச்சி கொடுக்க வேண்டும் என்கிற திட்டம் அவர்களிடம் இல்லை. திட்டங்களை வகுக்கக்கூடிய போதிய அறிவும் அவர்களிடம் இல்லை. மதுராந்தகம், தாராபுரம் மக்கள் அதிமுக விற்கு ஏற்கனவே ஆதரவு அளித்தார்கள். தமிழ்நாட்டு மக்கள் விழிப்புணர்வு உள்ளவர்கள். இடைத்தேர்தலில் த.வெ.க அரசிற்கு அவர்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். அதிமுகவில் அமமுக இணைய உள்ளது என்கிற செய்தியில் துளியும் உண்மையில்லை.இளவு காத்த கிளி போல் நான் எந்த பதவியையும் எதிர்பார்த்து காத்திருக்கவில்லை. த.வெ.க வை கூரையில் ஏற்றி விட்டுள்ளார்கள். விஜையை பிரதமர் என கூறுவது வானம் ஏறி வைகுண்டம் செல்வேன் என கூறுவது சிரிப்பாக தான் உள்ளது. இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது நல்ல யோசனை தான். இது குறித்து கூட்டணி தலைமையிடம் பேசுவேன். அவர்கள் தான் முடிவு எடுப்பார்கள் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.