Trending News Tamil News Website In Trichy

ஸ்ரீரங்கத்தில் குப்பையில் கிடைத்த 5 பவுன் நகையைத் திருப்பிக் கொடுத்த தூய்மைப் பணியாளர்களுக்குப் பாராட்டு

0

திருச்சி 21.10.2026

*ஸ்ரீரங்கத்தில் குப்பையில் கிடந்த ஐந்து பவுன் நகையை மீண்டும் உரிமையாளரிடம் ஒப்படைத்த திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள்*

*தூய்மை பணியாளர்களுக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு*

ஸ்ரீரங்கம் 2வது வார்டு பகுதி வடக்கு சித்திர வீதி பகுதியில் இன்று காலை திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பரமேஸ்வரி மற்றும் செல்வேந்திரன் (ஓட்டுநர்) ஆகியோர் குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த வரதராஜன் மனைவி சுசீலா தனது வீட்டு குப்பையை தூய்மை பணியாளரிடம் வழங்கியுள்ளார்

ஆனால் அந்த குப்பையுடன் அவரின் ஐந்து பவுன் நகையையும் இருந்துள்ளது

இதனை கண்டறிந்த தூய்மை பணியாளர்கள் உடனடியாக நகையின் உரிமையாளரிடம் 5 பவன் நகையை ஒப்படைத்தார்

தெரியாமல் குப்பையுடன் 5 பவுன் நகையை பறிகொடுத்த பெண்ணிடம் உடனடியாக மனித நேயத்துடன் நகையை ஒப்படைத்த நிகழ்வை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்

Leave A Reply

Your email address will not be published.