Trending News Tamil News Website In Trichy

திருச்சியில் நாளை திமுக மாநில மாநாடு- அலைகடலென திரண்டு வர பழனியாண்டி எம்.எல்.ஏ அழைப்பு*

0

*திருச்சியில் நாளை திமுக மாநில மாநாடு- அலைகடலென திரண்டு வர பழனியாண்டி எம்.எல்.ஏ அழைப்பு*

திருச்சி சிறுகனூரில் நடைபெறவுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க) மாநில மாநாட்டினை முன்னிட்டு, கட்சியினரிடையே பெரும் உற்சாகம் நிலவி வருகிறது. இந்த மாநாட்டிற்கான அழைப்பு விடுத்து ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான எம். பழனியாண்டி MLA அழைப்பு விடுத்துள்ளார்.

நாள்: மார்ச் 09
இடம்: சிறுகனூர், திருச்சி.

மாண்புமிகு தமிழக முதல்வர், கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் மாண்புமிகு துணை முதல்வர், இளந்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கின்றனர்.

“ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்” என்ற முழக்கத்துடன், தமிழகத்தின் அரசியல் களத்தில் முக்கியத் திருப்புமுனையாகக் கருதப்படும் இந்த மாநில மாநாட்டிற்கு, தொண்டர்களும் பொதுமக்களும் அலைகடலெனத் திரண்டு வந்து சிறப்பிக்க வேண்டும் என்று ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எம். பழனியாண்டி  கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மாநாட்டிற்காகப் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் திருச்சியில் செய்யப்பட்டுள்ளன. முதல்வர் மற்றும் துணை முதல்வர் பங்கேற்கும் இந்த நிகழ்வு, கழகத்தின் வலிமையை நிலைநாட்டும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.