திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் இலவச சிறுநீரக மருத்துவ முகாம்- 100-க்கும் மேற்பட்டோர் பயன்*
*🏥 திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் இலவச சிறுநீரக மருத்துவ முகாம்- 100-க்கும் மேற்பட்டோர் பயன்*

திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் கடந்த மார்ச் 12 முதல் 14 வரை (3 நாட்கள்) நடைபெற்ற சிறுநீரக நோய் கண்டறியும் சிறப்பு இலவச மருத்துவ முகாம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில்:
டாக்டர் கணேஷ் அரவிந்த் (சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்)
டாக்டர் என். கார்த்திகேயன் (சிறுநீரக நோய் சிறப்பு மருத்துவர்)
ஆகியோர் கலந்துகொண்டு நோயாளிகளுக்கு விரிவான ஆலோசனைகளை வழங்கினர்.

சர்க்கரை நோய்/இரத்த அழுத்தத்தால் ஏற்படும் சிறுநீரக பாதிப்பு, சிறுநீரக கல், புரோஸ்டேட் பிரச்சினைகள் மற்றும் சிறுநீரக புற்றுநோய் ஆகியவற்றுக்கு இலவச ஆலோசனை.
ரூ. 1500 மதிப்புள்ள முழு பரிசோதனைகள் (CBC, Urea, Creatinine, Sugar, BP, USG Abdomen) வெறும் ரூ. 500 சலுகை விலையில் மேற்கொள்ளப்பட்டன.
பாம்பு கடி, விஷ முறிவு மற்றும் அவசர சிறுநீரகப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் வழங்கப்பட்டன.
100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகாமில் பங்கேற்றுப் பயனடைந்தனர்.
மேல்சிகிச்சை தேவைப்படும் 55 நபர்கள் கண்டறியப்பட்டு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ்: சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை & 24 மணி நேர இரத்த சுத்திகரிப்பு (Dialysis). லேப்ராஸ்கோப்பி மூலம் மேம்பட்ட அறுவை சிகிச்சைகள். ICU தீவிர சிகிச்சை பிரிவு & சாலை விபத்து அவசர சிகிச்சை.
இருதய சிகிச்சை (Angiogram & Angioplasty). ஆகிய வசதிகள் திருச்சி
ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் உள்ளன..