Trending News Tamil News Website In Trichy

விவசாயிகள் போராட்டத்தில் பேனர் வைக்க அனுமதி மறுப்பு- சமயபுரத்தில் போராடும் விவசாயிகளுக்கும் தாசில்தாருக்கும் இடையே கடும் வாக்குவாதம்

0

திருச்சி 16.09.2026

விவசாயிகள் போராட்டத்தில் பேனர் வைக்க அனுமதி மறுப்பு- சமயபுரத்தில் போராடும் விவசாயிகளுக்கும் தாசில்தாருக்கும் இடையே கடும் வாக்குவாதம்

கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யக் கோரி திருச்சி சமயபுரம் அருகே 45-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கங்கள் இணைந்து கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக அரசு பயிர்க்கடன்களைப் பகுதியாக மட்டுமே தள்ளுபடி செய்ததால் கொந்தளிப்படைந்த விவசாயிகள் ஏற்கனவே சென்னையில் இரண்டு கட்டப் போராட்டங்களை நடத்தி அமைச்சர்களைச் சந்தித்தனர். அதில் எவ்வித தீர்வும் எட்டப்படாத நிலையில், தற்போது சமயபுரத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில், யாருக்கும் இடையூறின்றி காலியான இடத்தில் அறவழியில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த விவசாயிகளிடம், மண்ணச்சநல்லூர் தாசில்தார் மற்றும் காவல்துறையினர் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சமயபுரம் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் அரசியல் கட்சிகளின் பேனர்களை அகற்றாத அதிகாரிகள் காலியாக உள்ள இடத்தில் விவசாயிகள் கட்டிய பேனரை உடனடியாக அகற்றச் சொல்லி மிரட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகளுக்கும் தாசில்தாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அமைதியான முறையில் போராடும் தங்களை அதிகாரிகள் மிரட்டுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.