ப. சிதம்பரம் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டையில் சிறப்பு பிரார்த்தனை: திரளாகப் பங்கேற்ற காங்கிரஸ் நிர்வாகிகள்
திருச்சி 16.09.2026
*ப. சிதம்பரம் பிறந்தநாள்: திருச்சி மலைக்கோட்டையில் சிறப்பு வழிபாடு & அன்னதானம்*
முன்னாள் மத்திய அமைச்சரும் பொருளாதார மேதையுமான திரு. ப. சிதம்பரம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் சிறப்பு வழிபாடும் பொதுமக்கள் அன்னதான நிகழ்வும் கோலாகலமாக நடைபெற்றது.
முன்னாள் மாணவர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ராமநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாணிக்கவேல், கே.டி. பிச்சமுத்து மற்றும் ராஜவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருச்சி மலைக்கோட்டை பிள்ளையார் கோவிலில் திரு. ப. சிதம்பரம் அவர்களின் ஆயுள் ஆரோக்கியத்திற்காகவும் மக்கள் சேவை தொடரவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்குச் சுடச்சுட அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் வழக்குரைஞர் எம். சரவணன் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு அன்னதானத்தை வழங்கிச் சிறப்பித்தார்.
இந்த நிகழ்வில் மாநிலப் பேச்சாளர் சிவாஜி சண்முகம், மலைக்கோட்டை சொக்கலிங்கம், அண்ணா சிலை விக்டர், பசங்க பிரதாபன், வர்த்தகர் கோட்டத் தலைவர்கள் மார்க்கெட் மாரியப்பன், வாசுதேவன், மார்க்கெட் கோட்டத் தலைவர் சம்சு, உறையூர் விஜி, உள்ளிட்ட கட்சி முன்னோடிகள் சேகர், தாகூர் தெரு முருகன், ராஜீவ் காந்தி சண்முகம் மற்றும் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.