Trending News Tamil News Website In Trichy

கோவையில் கைதி தப்பி ஓடிய எதிரொலி- திருச்சியில் சிறைத்துறை பெட்ரோல் பங்குகள் மற்றும் அங்காடிகள் திடீர் மூடல்

0

திருச்சி 2.11.2026

கோவையில் பெட்ரோல் பங்கில் இருந்து

கைதி தப்பி ஓடிய சம்பவம் எதிரொலி

திருச்சியில் சிறைத்துறை சார்பில் நடத்தப்பட்ட பெட்ரோல் பங்குகள் மூடல்

கோவையில் சிறைத்துறை பெட்ரோல் பங்கில் இருந்து கைதி தப்பி ஓடிய சம்பவம் எதிரொலியால்

திருச்சியில் சிறைத்துறை சார்பில் நடத்தப்பட்ட 2 பெட்ரோல் பங்குகள் திடீரென்று மூடப்பட்டது.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக சிறைத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.தேனி சிறையிலிருந்து கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பு அடங்குவதற்குகோவையில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது

கோவை காந்திபுரம் பாலசுந்தரம் ரோட்டில் கோவை சிறை நிர்வாகம், இந்தியன் காப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த பெட்ரோல் பங்கில் கடந்த 29ம் தேதி வேலையில் இருந்த விஜய்ரத்தினம் என்ற கைதி தப்பியோடிவிட்டார். இச்சம்பவத்தில் கவனகுறைவாக இருந்த தலைமை வார்டர்கள் உட்பட 3 பேரை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இச்சம்பவத்தை தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள வேலூர், சென்னை, திருச்சி, மதுரை உள்ளிடட மத்திய சிறைகளில் கைதிகள் நடத்தும் சிறை பெட்ரோல் பங்க்கில் உள்ள கைதிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தவும், காவலர்கள் செல்போன் பயன்படுத்த தடை என பல்வேறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது

இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி உத்தரவின் பேரில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மத்திய சிறைத்துறை சார்பில் நன்னடத்தை கைதிகளைக் கொண்டு நடத்தப்பட்டு வந்த பெட்ரோல் பங்க், உணவகம் மற்றும் கோழி இறைச்சிக் கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

திருச்சி மாநகர பகுதியில் காந்தி மார்க்கெட் அருகில் மகளிர் சிறைச்சாலைக்கு வெளியே இயங்கி வந்த பெட்ரோல் பங்க், சிறைத்துறை உணவகம், கோழி இறைச்சிக் கடை மற்றும் சிறை அங்காடிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதேபோன்று திருச்சி புதுக்கோட்டை சாலையில் மத்திய சிறை வளாக பகுதியில் உள்ள மற்றொரு பெட்ரோல் பங்க் மற்றும் அங்காடி மூடப்பட்டுள்ளது. சிறை வளாகத்திற்கு

வெளியே பெட்ரோல் பங்க்குகள் செயல்படுவதாலும், பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கைதிகள் பணியமர்த்தப்படுவதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை முழுமையாக ஆய்வு செய்யும் வரை இந்த மூடல் தற்காலிகமாக அமலில் இருக்கும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருச்சியில் மையப் பகுதியான காந்தி மார்க்கெட் பகுதியில் இருக்கும் பெட்ரோல் பங்க் நாளொன்றுக்கு பல லட்ச ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறும் இந்த முக்கிய பெட்ரோல் பங்க் திடீரென மூடப்பட்டதால், எரிபொருள் நிரப்ப வந்த வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.