*மக்களுக்குப் பயன்தராத திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப ‘இரட்டை இலை’க்கு வாக்களிப்பீர்” – ஸ்ரீரங்கத்தில் வேட்பாளர் மனோகரன் சூளுரை*
திருச்சி
ஸ்ரீரங்கம் தொகுதி மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை- அஇஅதிமுக வேட்பாளர் மனோகரன் அதிரடி வாக்குறுதி*
திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மனோகரன் இன்று குழுமணி, சீரா தோப்பு மற்றும் மருதாண்டாகுறிச்சி ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வாக்கு சேகரிப்பின் போது பொதுமக்களிடையே உரையாற்றிய வேட்பாளர் மனோகரன்:இந்தத் தொகுதியில் நீண்ட காலமாகக் குடிநீர், சாலை வசதி, கழிவுநீர் வடிகால் மற்றும் தெரு விளக்கு போன்ற அடிப்படைத் தேவைகளே பூர்த்தி செய்யப்படாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. கவுன்சிலர் முதல் அமைச்சர்கள் வரை இருந்தும், மக்களின் அன்றாடப் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை.
முக்கிய வாக்குறுதிகள்: வெற்றி பெற்றவுடன் மக்களின் நீண்டகாலப் பிரச்சனைகளை நேரில் ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.குடிநீர் தட்டுப்பாடு மற்றும் பழுதடைந்த சாலைகளைச் சீரமைக்க முன்னுரிமை அளிக்கப்படும்.அரசு இயந்திரத்தைச் சரியாகப் பயன்படுத்தி, கிடப்பில் உள்ள திட்டங்கள் விரைந்து முடிக்கப்படும்.
திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்த அவர், “மக்களுக்குப் பயன் தராத இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப, இரட்டை இலை’ சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.
இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்வில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அஇஅதிமுக, பாஜக, பாமக, அமமுக, தமாகா மற்றும் பிற தோழமைக் கட்சிகளின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
வழிநெடுகிலும் பொதுமக்களும், கழக நிர்வாகிகளும் வேட்பாளர் மனோகரனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.