Trending News Tamil News Website In Trichy

எங்களை வீழ்த்த நினைப்பவர்களுக்கு வெற்றியின் மூலமே பதிலடி- முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு ஆதரவாக மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் அறிக்கை

0

திருச்சி 29.10.2026

முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு ஆதரவாக மண்ணச்சநல்லூர் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் அறிக்கை

திமுக முதன்மைச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவின் உண்மையான விசுவாசியாகத் தொடர்ந்து இயங்குவோம் என்றும், கழகப் பணிகளில் எங்களின் வலுவான செயல்கள் எப்போதுமே தெளிவான முடிவை நோக்கியே இருக்கும் என்றும் திருச்சி வடக்கு மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் தேவிமங்கலம் பிரசாந்த் சக்தி தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களிலும் அரசியல் களத்திலும் எழும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களை வீழ்த்த நினைப்பவர்களுக்குத் தங்களின் வெற்றியின் மூலமே பதிலடி கொடுக்கப்படும் என்ற குறிக்கோளுடன் கழகத் தொண்டர்கள் உறுதுணையாய் நிற்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், “எங்கள் ஐயாவை யாரும் எதுவும் செய்துவிட முடியாது; ஒரு நேருவைத்தான் நீங்கள் பார்த்திருப்பீர்கள், ஆனால் அவர் கை அசைத்தால் பின்னாலிருந்து நூறு நேருக்கள் வருவார்கள்” என்று அதில் சூளுரைக்கப்பட்டுள்ளது. கே.என்.நேருவின் வழியில் தொடர்ந்து கழகப் பணிகளைத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்வோம் என்றும் அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.