Trending News Tamil News Website In Trichy

பிரதமர் வருகை எதிரொலி- திருச்சி பால்பண்ணை ரவுண்டானாவில் DYFI ஆர்ப்பாட்டம்- குண்டுகட்டாகத் தூக்கிச் சென்று போலீசார் கைது

0

திருச்சி 11.10.2026

தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கருப்புக்கொடியுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட Dyfi அமைப்பினர் கைது

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகை தந்துள்ளார். இந்த நிலையில் இந்தியாவில் மாணவர்களுக்கான கல்வி இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றை மோடி தலைமையிலான அரசு முறையாக வழங்கவில்லை

வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை தீவிர திருத்தம் என்ற பெயரில் நாடு முழுவதும் சுமார் 13 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் தேர்தல் ஆணையர் ஞானஸ் குமார் மூலம் நீக்கி உள்ளதை கண்டித்து ம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) சார்பில் திருச்சி அரியமங்கலம் பழைய பால்பண்ணை ரவுண்டானாவில் கருப்புக்கொடியுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தின் போது, 13 கோடி வாக்காளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதற்குக் காரணமான இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும்

என வலியுறுத்தியும் பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகையை கண்டித்தும் இளைஞர்கள் மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

முக்கிய சந்திப்பான பால்பண்ணை ரவுண்டானாவில் திடீரென கருப்புக்கொடிகளுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், போராட்டக்காரர்களைக் கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர்.

இருப்பினும், தங்களின் கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பி வாலிபர் சங்கத்தினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகளைப் போலீசார் குண்டுகட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.